சூப்பர்ர்ர், அற்புதம் , ஹாஹாஹா, எனக்கும் ஒரு கதை யோசிங்க – இளம் இயக்குனரை போன் செய்து பாராட்டிய ரஜினி – ஆடியோ இதோ.

0
980
desingu
- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த 2020ம் ஆண்டில் வெளியான படங்களில் பல படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாகப் எதிர் பார்பே இல்லாமல் பல திருப்பங்களுடன் அண்மையில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது வருகிறது. மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் 25 வது படம் தான் இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம்.

-விளம்பரம்-

படத்தின் டைட்டிலை பார்த்துவிட்டு, இது ஏதோ வழக்கமான துல்கர் சல்மானின் ரோமன்ஸ் படமாக தான் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படு சூப்பரான ஒரு திரில்லிங் படமாக இந்த படம் அமைந்துள்ளது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். இந்த படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கிய ரோலில் செய்திருந்தார்கள். அதில் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஆட்களாக துல்கர், கௌதம் மேனன், ராட்ஷன் என்று சிலர் மட்டும் தான் இருந்தார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துவிட்டு மிகவும் இம்ப்ரெஸ் ஆகி, இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். சூப்பர்ர்ர், அற்புதம் , ஹாஹாஹா, உண்மையில் நான் பழைய. காலத்துக்குப் போய்விட்டேன். வாழ்த்துகள். பெரிய எதிர்காலம் உங்களுக்கு மேலும், எனக்கும் ஒரு கதை பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

இந்த போன் காலின் ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாராட்டியது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் தேசிங்கு துரைசாமி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை அங்கீகரித்துள்ளதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாராட்டுவதால்தான் ரஜினிகாந்த் சந்திரனுக்கு மேலே இருக்கிறார் என்றும் நெகிழ்ந்துள்ளார்காலையில் இருந்து இது மட்டும்தான் கேட்டுக்கிட்டு இருக்கு. காத்துல பறந்துக்கிட்டே இருக்கேன். கடவுளே நன்றி. இந்த நாளுக்காக காத்திருந்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement