இனிமேல் ஷூட்டிங்கில் தண்ணி போட்டு வந்த செருப்பால அடிப்பேன்னு சொன்னாரு – ரஜினி பேசிய ஷாக்கிங் வீடியோ.

0
6582
rajini

அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். காலங்கள் பல கடந்தாலும் தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் ரசிகர்களை தன்பக்கம் கட்டிப்போட்டவர். இவர் தமிழ் சினிமா உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் வீடியோ கால் மூலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு முறை நான் தண்ணி சாப்பிட்டு இருந்தேன்.

திடீரென்று ஒரு காட்சி எடுக்க வேண்டும் வாங்க என்று ஃபோன் பண்ணினார்கள். நான் உடனே பிரஸ் பண்ணி, குளித்துவிட்டு ஸ்பிரே அடித்துக் கொண்டு, மேக்கப் எல்லாம் போட்டு கொண்டு போனேன். பாலசந்தர் சார் கிட்ட போக கூடாது என்று முயற்சி பண்ணி நின்றேன். இருந்தாலும் அவர் கண்டுபிடித்து விட்டார். உடனே அவர் என்னை உள்ளே வா என்று கூப்பிட்டார். அப்படியே எனக்கு ஆடி போய் விட்டது. உனக்கு நாசர் தெரியுமா என்று கேட்டார். அவர் எப்படிப்பட்ட ஆர்டிஸ்ட்.

- Advertisement -

அவர் முன்னாடி நீ எல்லாம் ஒரு எறும்புக்கு கூட சமமில்லை. தண்ணி போட்டு அவர் வாழ்க்கை வேஸ்ட் பண்ணிட்டார். இனிமேல் ஷூட்டிங்கில் தண்ணி போட்டேன் என்று நான் கேள்விப்பட்டேன் செருப்பாலே அடிப்பேன் என்று சொன்னார். நான் தண்ணி அடிக்கும் பழக்கத்தை அன்று விட்டவன். எந்த குளிர்பிரதேசதுக்கு போனால் கூட நான் ஒரு சொட்டு தண்ணீர் கூட சாப்பிடுவது இல்லை என்று கூறினார்.

Show me one actor who can be this transparen !! More over an actor, I like a lot this kind of ‘RAJINIKANTH’உண்மையா பேசுறது !!!My THALAIVAR ❤️❤️

SSRK veriyans ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಮೇ 8, 2020

தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement