கதை பிடித்துப்போய் ‘மதனா’ என்று டைட்டிலை கூட ரஜினி வச்சிட்டாரு – ஆனால், அந்த படத்தில் நடித்தது அஜித். கே எஸ் ரவிகுமார்.

0
2585
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவருடைய பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றி அடைந்து உள்ளது. இவர் எப்போதும் தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் முதலில் இயக்குனர் விக்ரமன் இடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதற்கு பிறகு தான் புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானர். அதனை தொடர்ந்து நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, படையப்பா, வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதோடு இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் படங்களாக தான் அமைந்து உள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு தமிழில் வந்த திரைப்படம் “வரலாறு”. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு காட்பாதர் என்ற தலைப்பினை வைத்து பின்னர் வரலாறு என்று மாற்றம் செய்து வெளியிட்டார்கள். இந்த படம் வெளி வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தில் அஜித் குமர், அசின், கணிகா சுப்ரமணியம், ரமேஷ் கண்ணா, சுமன் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தல அஜித் அவர்கள் இந்த படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் முதன் முதலாக நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது குறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் இயக்குவதாக இருந்த திரைப்படம் தான் வரலாறு. இந்த படத்தின் கதையை ஏற்கனவே கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் ரஜினியிடம் கூறி உள்ளார். அதற்கு ரஜினியும் கதை பிடித்துப் போய் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அந்த படத்திற்கான டைட்டில் ‘மதனா ‘ என்று கூட தேர்வு செய்து இருந்தார்கள். அதன் பின்னர் கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் ஜக்குபாய் படத்தின் பணிகளில் தீவிரமாக இருந்ததால் அந்த படம் நின்று விட்டது. அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் சந்திரமுகி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது தான் வரலாறு படத்தின் கதையை அஜித்திடம் கேஎஸ் ரவிக்குமார் கூறினார்.

அஜித்துக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த கதை பிடித்து விட்டால் உடனடியாக வரலாறு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டார்கள் என்று கூறினார். பின் ரஜினிகாந்த் அவர்கள் கே.எஸ். ரவிக்குமாரை சந்தித்து வரலாறு படத்தில் நான் நடிப்பதாக கூறி இருந்தீர்கள், ஏன் எனக்கு இந்த படத்தை தரவில்லை என்று கேட்டதாக கூறியிருந்தார். உண்மையிலேயே அந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் தான் நடித்து இருக்க வேண்டிய படம் என்றும் கேஎஸ் ரவிக்குமார் பேட்டியில் கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement