சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த சிங்கப்பூர் நடிகை குறித்து பலரும் அறிந்திராத தகவலை தான் இங்கு பார்க்க போகிறோம். கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். என்பது காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் பிரியா. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பல சிங்கப்பூர் மக்களும் நடித்திருப்பார்கள். அதிலும், அக்கரை சீமை அழகினிலே, ஓ பிரியா போன்ற படங்களெல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

Advertisement

பிரியா பட நடிகை:

மேலும், இந்த படத்தில் சுபத்ரா என்ற கதாபாத்திரத்தில் பெண் ஒருவர் நடித்திருப்பார். இவர் உண்மையிலேயே சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர் தான். இவருடைய உண்மையான பெயர் அஸ்னா ஷமித். இந்நிலையில் இவரை குறித்து பலரும் அறியாத கவலை தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் பிரியா திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது இவருக்கு 70 வயதாகி இருக்கிறது. இவர் சிங்கப்பூரில் வாசனை திரவியங்கள் விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அஸ்னா ஷமித் லேட்டஸ்ட் புகைப்படம்:

அதோட இவர் மலாய் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் தன்னுடைய புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது இருக்கும் இவருடைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவராக இவர்! என்று வியப்பில் கமெண்ட்களை பதிவிட்டு புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

ரஜினி திரைப்பயணம்:

கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் இயக்கினார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் இந்த மோகன்லால், தமன்னா, வசந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இதனை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ மகள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

Advertisement

ரஜினி நடிக்கும் படம்:

சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு மே அல்லது ஜூனில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பலரும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Advertisement