இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்தாரா ரஜினிகாந்த்? – காரணம் இது தானாம்

0
103
- Advertisement -

ரஜினி-மாரி செல்வராஜ் கூட்டணி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என்று பேன் இந்தியா அளவில் வெளியாகி வெற்றியை கண்டது. அதோடு மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூல் சாதனையும் செய்து இருந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார்.

- Advertisement -

ரஜினி திரைப்பயணம்:

இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினியின் 171வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ‘கூலி’ படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் இந்தப் படத்தில் நடிக்கிறார். இதனாலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கூலி படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முமரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மூன்று மாதம் ஓய்வெடுக்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த இடைவெளியில் தன்னுடைய சுயசரிதையை எழுத இருக்கிறாராம்.

-விளம்பரம்-

ரஜினி நடிக்கும் படங்கள்:

அதற்குப்பின் இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதனுடைய இரண்டாம் பாகத்தை தான் எடுக்க இருக்கிறார்கள். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக எடுக்க இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மாரி செல்வராஜ்-ரஜினி கூட்டணி:

இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சமீபத்தில் கூட மாரி செல்வராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருக்கிறாராம். இப்படி இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ்- ரஜினிகாந்த் கூட்டணி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. காரணம், மாரி செல்வராஜ் படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. இது அனைவரும் அறிந்ததே. இதையெல்லாம் யோசித்து தான் ரஜினிகாந்த், மாரி செல்வராஜ் படத்தல் நடிக்க மறுத்து இருக்கிறாராம். ஆனா,ல் வேறு சில இயக்குனர்களிடம் ரஜினி கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement