திருவண்ணாமலையில் நிலச்சரிவா? எப்போ? – ரஜினிகாந்த் சொன்ன பதிலால் விளாசி வரும் நெட்டிசன்கள்

0
167
- Advertisement -

திருவண்ணாமலை நிலச்சரிவு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த புயல் கரையை கடக்கவே இரண்டு நாட்கள் ஆனது. இதனால் மழைப்பொழிவு அதிகமாக இருந்தது.

-விளம்பரம்-

தமிழகத்தின் வட மாவட்டங்களை தான் இந்த புயல் புரட்டி போட்டு இருக்கிறது. முதலில் இந்த புயல் சென்னை, புதுச்சேரி பகுதிகளில் தான் அதிக அளவு கனமழை பெய்தது. அதற்கு பிறகு தான் விழுப்புரம், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி நோக்கி நகர்ந்து சென்று வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுமே வெள்ளத்தில் மூழ்கி இருந்தது .

- Advertisement -

ஃபெஞ்சல் புயல்:

மேலும், இந்த புயலால் திருவண்ணாமலையில் யாரும் எதிர்பாராத வகையில் கனத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது. இந்த சம்பவம் அறிந்து மீட்பு பணிகள் தீவிரமாக செயல்பட்டு இருந்தார்கள். இருந்துமே இந்த நிலச்சரிவில் ஏழு பேர் அநியாயமாக உயிர் இழந்து இருந்தார்கள். அந்த பகுதியில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிப்பு என பல தடங்கல்கள் ஏற்பட்டது. இதனால் மீட்பு பணி வேலையும் தாமதமாக இருந்தது.

திருவண்ணாமலை மண்சரிவு:

இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தான் ஒவ்வொரு சடலமாகவே எடுத்தார்கள். ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி அவர்களுடைய இரண்டு குழந்தைகளுடன் அங்கு விளையாட வந்த மூன்று குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர் இறந்திருக்கிறார்கள். இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் பெரும் துரயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

பிரபலங்கள் உதவி:

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பேருந்து மூலம் பனையூருக்கு அழைத்து சென்று ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை மற்றும் நிவாரண பொருட்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வழங்கி இருந்தார். தன்னுடைய சொந்த பணத்தில் விஜய் செய்து இருந்த உதவியை பலரும் பாராட்டி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிவகார்த்திகேயன், கார்த்தி ஆகியோர் நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்கள்.

ரஜினி சொன்ன விஷயம்:

இப்படி இருக்கும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரஜினி சொன்ன பதில் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. கூலி படத்தின் சூட்டிங்க்காக ஜெய்ப்பூரில் கலந்து கொள்ள இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது அவரிடம் திருவண்ணாமலை
மண் சரிவு குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். உடனே ரஜினிகாந்த், ஷாக் ஆகி அப்படியா, எப்போ நடந்தது? ஓ மை காட் சாரி என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி சென்றிருக்கிறார். ரஜினிகாந்தின் இந்த பதில் தான் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ரஜினியை திட்டியும் விமர்சித்தும் வருகிறார்கள்.

Advertisement