உசுரோட இருக்கப்ப கேக்க மாட்டாங்க, செத்ததுக்கப்புறம் பால ஊத்தறேன்,மோர் ஊத்தறேன்னு – ரஜினியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

0
828
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

மயில்சாமி மறைவு :

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் அஞ்சலி :

இதனை தெடர்ந்து பிரபலங்கள் பலரும் மயிலசாமிக்கு அஞ்சலி செலுத்திவரும் நிலையில் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில் “மயில்சாமி என்னுடைய நீண்டநாள் நண்பர், 23, 24 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். மிமிக்ரி கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்துவிட்டார். அவர் தீவிர எம்ஜிஆர் ரசிகர் அதோடு தீவிர சிவா பக்த்தரும் கூட.

-விளம்பரம்-

அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் :

நாங்கள் இருவரும் பல முறை சந்தித்து பேசியிருக்கிறோம். ஆனால் சினிமா சம்மந்தமாக பேச மாட்டார். நாங்கள் இருவரும் அதிக படங்களில் இணைந்து நடிக்கவில்லை, அது ஏன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கும் திருவண்ணாமலைக்கு தவறாமல் போய்விடுவார். அங்கே இருக்கும் பகதர்கள் கூட்டத்தை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்வார். அதே போல கடந்த கார்த்திகை தீபத்திற்கும் எனக்கு மூன்று முறை போன் செய்தார். நான் அப்போது படப்பிடிப்பில் இருந்ததால் எடுக்கவில்லை. அதற்காக பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் மறந்து விட்டேன்.

கண்டிப்பாக ஆசையை நிறைவேற்றுவேன் :

நடிகர் மற்றும் ஒரு சிறந்த கலைஞரை நாம் இழந்து விட்டோம். விவேக் மற்றும் மயில்சாமி என இரண்டு நகைச்சுவை நடிகர்களின் மறைவு சமூகத்திற்கு பெரிய இழப்பு. சிவராத்திரி அன்றைக்கு மயில்சாமி இறந்தது, தன்னுடைய தீவிர பக்தனை சிவபெருமான் தனக்கு உகந்த நாளில் அழைத்துக்கொண்டார். இது தற்ச்செயலாக நடந்தது இல்லை ஆண்டவனின் கணக்கு. கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் எனது கையால் நான் பாலாபிசேகம் செய்ய வேண்டும் என்று மயில்சாமி கடைசியாக ஆசைப்பட்டார் என கேள்விபட்டேன்.

ரஜினியை விமர்சிக்கும் ரசிகர்கள் :

அதனை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தின் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் ரஜினியை விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் ‘ஆமா உசுரோட இருக்கப்ப என்ன ஏதுன்னு கேட்க மாட்டாங்க….செத்ததுக்கப்புறம்…பால ஊத்தறேன் மோர் ஊத்தறேன்னு…’மேலும்,அப்பவே இதை செஞ்சிருந்தா மீடியாக்கு தெரியாம போயிருக்கும். இப்படி செஞ்சாதான் தெரியும்’ என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement