சூப்பர் ஸ்டார் ரஜினிய தெரியும், மேடை நாடகத்தில் நடித்த சிவாஜி ராவை தெரியுமா ? வைரலாகும் அறிய புகைப்படம்.

0
254
rajini
- Advertisement -

‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலுக்கு கேட்ப ரஜினியை தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், அண்ணன்-தங்கை பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

நெல்சன்-ரஜினி கூட்டணி படம்:

அந்த வகையில் டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. தற்போது நெல்சன் ஸ்டார் நாயகர்களின் ஃபேவரைட் இயக்குனராக திகழ்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

தலைவர் 169 படம் பற்றிய தகவல்:

இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிரூத் மூவரும் செம்ம மாஸாக இருக்கின்றார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் பெற்றிருந்தார். இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரஜினிகாந்த் பழைய புகைப்படம்:

இந்த நிலையில் ரஜினி உடைய பழைய புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள், வீடியோக்கள் என்று சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் அதிகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினி உடைய பழைய புகைப்படம் வெளியாகி உள்ளது.

மேடை நாடகத்தில் ரஜினி:

அது என்னவென்றால், 70களில் நாடக கலைஞராக மேடை நாடகத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். அதாவது 1975 ஆம் ஆண்டு ரஜினி சினிமாவில் அறிமுகமான ‘மௌன ராகம்’ படத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இந்த நாடகம் கர்நாடகாவில் அரங்கேற்றி இருந்தது. ஸ்டைலான ரஜினியை பார்த்து பழகி ரசிகர்கள் அவருடைய நாடக மேடையில் நடித்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தற்போது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நாடக நிகழ்ச்சிக்கு பிறகு தான் ரஜினி அவர்கள் சினிமா துறையில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement