சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘தலைவ ர் 168’.. இயக்குனர் யார் தெரியுமா..அதிகரபூர்வ அறிவிப்பு இதோ..

0
1651
thalaivar-168
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் இறுதியாக கார்த்திக் சுப்பராஜின் “பேட்ட” படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் சாதனையையும் படைத்திருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரான பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் “தர்பார்” படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார்போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. மேலும், படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சூப்பர் ஸ்டாரின் ஜோடியாக ஒரு சூப்பர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு ரசிகரும் அவர் அடுத்த, அறிவிப்பைப் பற்றி மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், ​​சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திட்டம் குறித்து ஒரு பெரிய அறிவிப்பைக் கொண்டு வந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்காலிகமாக “தலைவர் 168” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை “விஸ்வாசம்” புகழ் சிவா இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குனர் சிவா அவரது வீட்டில் இரண்டு முறை சந்தித்தார் என்று வதந்தி பரவியது. நவராத்திரியின் போது பூஜையில் கலந்து கொள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு சிறுத்தை சிவா அழைக்கப்பட்டார். அதன் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் பாருங்க : என்னோட தயவுல தான் நீ வாழுற அபிராமி.. விரைவில் உன்னை போலீஸ் பிடிக்கும்.. எச்சரித்த மீரா..ஏன் ?

- Advertisement -

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது அடுத்த படத்தின் அறிவிப்பை புதிய முயற்சியை அறிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், எந்திரன் மற்றும் பேட்டையின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் மற்றும் சன் பிக்சர்ஸ்ஸின் மெகா கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக தலைவர் 168 படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தை சிவா இயக்குகிறார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சூப்பர் ஸ்டார் மற்றும் சிவா இணையும் புதிய படத்திற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image

இயக்குனர் சிவா தனது பிளாக்பஸ்டர்களான சிறுத்தை , வீரம், விஸ்வாசம் போன்றவற்றால் மிகவும் வெற்றிகரமான இயக்குனர் என்ற பெயரை எடுத்துள்ளார். அதிலும் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் இறுதியாக வெளியான விசுவாசம் திரைப்படம் பேட்ட படத்திற்கு எதிராக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. எனவே, கமர்சியல் படங்களுக்கு ஸ்பெசலிஸ்ட்டான சிவா ரஜினியை வைத்து “படையப்பா” வகையானகமர்சியல் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இது சமூக ஊடகங்களில் தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்த படத்தின் பணிகளை தர்பார் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தலைவர் 168 அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு சூப்பர் ஸ்டாரின் இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement