என்னோட தயவுல தான் நீ வாழுற அபிராமி.. விரைவில் உன்னை போலீஸ் பிடிக்கும்.. எச்சரித்த மீரா..ஏன் ?

0
36734
meera-abhi

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மீராமிதுன் தான் பல்வேறு சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார், பீர் குடிப்பது புகை பிடிப்பது ஆண்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் பப்பில் ஆடுவது போன்ற பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார், ஆனால், இவர் பதிவிடும் பதிவுக்கு பத்தாயிரத்துக்கும் மேல் லைக்ஸ்கலை கிடைப்பது கிடையாது என்பது வேறு விஷயம். அந்த வகையில் சமீபத்தில் மீராமிதுன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் அந்த புகைப்படத்திற்கு அபிராமி ஆர்மி, அமானுஷ்ய சக்தியே செத்துரு ஏன் உயிரோடு இருக்க இன்னும் என்று பதிவிட அதனை கண்ட மீராமிதுன் கடும் கோபம்கொண்டு, அபிராமி வாழ்க்கை கொடுத்ததே நான்தான் கேவலமா என்ன பின்னாடி சுத்தாம போய் பொழப்ப பார்க்க சொல்லு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நான் ஆளப்பிறந்தவன் சாவுக்கு அஞ்சாதவ, நான் வேணா கயிறு அனுப்புகிறேன் என்று அபிராமி மீரா பதில் கொடுத்துள்ளார்.

மேலும், இந்த உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீரா, அபிராமிக்கு எச்சரிக்கையும் விட்டுள்ளார். அதில் இதுபோன்ற கேவலமாக செய்வதை நிறுத்துங்கள் அபிராமி. உங்கள் வாழ்க்கையை தேடிக்கொள்ளுங்கள் ஜோ குழுவே. இதன்பின்னர் என்னிடம் வம்பு வைத்துக் கொள்ளாதே அபிராமி நீ என்னுடைய தயவில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்பது அனைவருக்கும் தெரியும் ஆபிராமி. என்னை கலாய்ப்பதற்காக பணத்தை வீணாக்காதே. உனக்கு என்னுடைய ரசிகர் பட்டாளம் பற்றி நன்றாகவே தெரியும். அவர்கள் உன்னை எரித்து விடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார். அபிராமியின் இந்த பதிவிற்கு ட்விட்டர் வார் ஒருவர் செய்த , அபிராமி உன்னை நம்பித்தான் ஏமாந்தார் உன்னை இன்னமும் போலீஸ் பிடிக்கவில்லையா. உன்னை போன்ற அமானுஷ்ய பப்ளிக்காக சுற்றினால் அது பப்ளிக் தான் பாதிப்பு. இன்னும் உன்னை ஜோ வச்சி செய்யப் போகிறார். அவர் மிகவும் நல்லவர் இப்பவாது திருந்திருயா என்று கமெண்ட் செய்திருந்தார்.

இதையும் பாருங்க : ரசிகருக்கு கையை கொடுத்திட்டு டெட்டால் போட்டு கழுவினத நானே பாத்திருக்கேன்..

- Advertisement -

இதற்கு பதிலளித்துள்ள மீரா மிதுன் ஜோ யார் என்பதை தெரிந்த அனைவருக்கும் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை கூறிக் கொள்கிறேன். அதேபோல சில மாபியா உடன் சேர்ந்து அபிராமி செய்த குற்றங்களுக்காக அவரும் விரைவில்உள்ளே செல்வார். அனைத்தையும் தாண்டி கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இவர்கள் செய்யும் அத்தனையும் தெரியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அபிராமி இடம் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு எதிராக கமெண்ட் செய்யும் அனைவர் பற்றியும் தனக்கு கவலை இல்லை என்றும், என்னுடைய ஆதரவாளர்கள் வெற்றி தனக்குத் தெரியும். எனவே, நீங்கள் சொல்வது எல்லாம் நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் கூறியுள்ளார் மீரா மிதுன்.

ஏற்கனவே தனது ட்விட்டர் பக்கத்தில் அபிராமி மற்றும் சாக்க்ஷி குறித்து ட்வீட் செய்திருந்த மீராமிதுன். பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி அபிராமி மற்றும் சாக்க்ஷி எனக்கு நண்பர்களே இருக்கக்கூடாது என்பதற்காக என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி எனது நண்பர்களை மிரட்டியுள்ளார். மேலும், நான் பைத்தியம் என்றும் எனக்கு மருத்துவ உதவி தேவை என்றும் எனது நண்பர்களை நம்ப வைத்து உள்ளார்கள் என்று பதிவிட்டிருந்தார். மேலும் தனது நண்பரை ஒற்றுமையுடன் இணைந்து சாக்ஷி மற்றும் அபிராமி பல்வேறு தனிப்பட்ட வாட்ஸப் குழுவில் பகிர்ந்து உள்ளதாகவும் இதனால் தனக்கு பலர் தொடர்பு கொண்டு தன்னை மனரீதியாக தாக்கிப் பேசுவதாகவும் கூறியுள்ளார் மீரா மிதுன் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement