‘எப்படி இவ்ளோ கீழ் தனமா போய்ட்டு இருகாங்க ஜெயலலிதா’ – இன்று ஜெவிற்கு வீடியோ வெளியிட்ட ரஜினி, 1996ல் பேசிய வீடியோவை பாருங்க.

0
374
Rajinikanth
- Advertisement -

தமிழக மக்களின் அம்மாவாகவும் இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இவர் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். பின் இவர் எம்ஜிஆர் மீது இருந்த பற்றின் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.அதற்கு பிறகு புரட்சித்தலைவி, அம்மா என்று இவருக்கு மக்கள் ஆதரவளித்தார்கள். மேலும், இவர் அரசியலில் நுழைவதற்கு முன் 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

1991ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஆனார். அதனை தொடர்ந்து இவர் ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக வகித்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவ்வுலகை விட்டு மறைந்தார். மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் இருந்த மறையாத இவரின் 75வது பிறந்தநாளில் பலரும் இவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் ‘ஜெயலலிதாவின் 75 பிறந்த நாளில் அவர் இப்போது நம்மிடம் இல்லை என்பதை வருத்தத்துடன் நினைவூட்டிக் கொள்கிறேன். ஜெயலலிதாவை போன்ற இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம்,அறிவு, துணிச்சல், ஆளுமை கொண்டவர். எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர் என்று பெயர் உள்ளது எல்லோருக்கும் தெரியும். நடிகனாக இருந்து கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து அவர் மறைவுக்கு பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, கட்சியில் மிகப்பெரிய அனுபவமான, திறமையான தலைவர்கள் எல்லாம் இருக்கும் போது தனி பெண்மணியாக பிளவுபட்ட கட்சியை ஒன்றாக இணைத்து கட்சியை இன்னும் பெரிதாக மாற்றி பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள்.

இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவை மதித்தார்கள். அவரின் திறமையைப் பார்த்து பிரமித்தார்கள். ஒரு கால கட்டத்தில் எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு எதிராக பேச வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்கு அப்புறம் என் மகள் திருமணத்திற்கு அழைத்தபோது அதனை எல்லாம் மறந்து திருமணத்திற்கு வந்து திருமணத்தை நடத்தி கொடுத்தார்கள் அவ்வளவு பெரிய கருணை உள்ளம்’ என்று பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி இருக்க இதே ரஜினிகாந்த் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா குறித்து பேசிய வீடியோவில் ‘ஜெயலலிதா அவர்கள் ரஜினி கருப்பு பணம் வாங்கினாரா? இல்லையா? என்று கேட்டிருக்கிறார்.நான் கருப்பு பணம் வாங்கியது இல்லை என்று சொன்னால் அது பொய். நான் கருப்பு பணம் வாங்கி இருக்கேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பு பணம் வாங்கி இருந்தேன். அதற்கு பிறகு எனக்கு புத்தி வந்து நான் கருப்பு பணம் வாங்குவதை குறைத்துக் கொண்டேன். மேலும், சினிமா துறையை பற்றி தெரிந்துகொண்டே ஜெயலலிதா அவர்கள் கருப்பு பணத்தை பற்றி கேள்வி எழுப்புவது நினைத்தால் என்ன சொல்வதென்று தெரியல.

ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு இவ்வளவு கீழ்த்தரமான செயலில் இறங்கி இருப்பது வருத்தமாக இருக்கிறது.இப்போது கூட நான் வருமான வரி சோதனையின் ரிப்போர்ட் கொடுக்கிறேன். இவ்வளவு ஆன பிறகு கூட ஜெயலலிதா அவர்கள் இப்போ மாறாதவர் வாழ்க்கையில எப்போவும் மாறமாட்டார்கள். முதலில் அவர்களுக்கு பண வெறி இருந்தது, இப்ப பதவி வெறி வந்து விட்டது. அவர்கள் என்னைக்கும் மாற மாட்டார்’ என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement