விஜயகாந்தை பார்த்து பயந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எதற்கு தெரியுமா ?

0
1142
rajini
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் ஆகியோர் கொடிகட்டி பறந்த காலத்தில் அவர்களுக்கு ஈடாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்கள் ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளார் கேப்டன்.

மேலும் நடிகர் சங்க தலைவராகவும் இருந்து அந்த சங்கத்தின் கடனை அடைதவர் விஜயகாந்த். அதன் பின்னர்தான் அந்த பொறுப்பு சரத்குமாரிடம் வந்தது. விஜயகாந்தும் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது அந்த சங்கத்தின் கடனை அடைக்க பல கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

- Advertisement -

அந்த சமயத்தில் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிகாந்த் பாபா சூட்டிங்கில் இருந்தார்.

Rajini

அப்பொழுது ரஜினியை கலைநிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சங்க நிர்வாகிகளுடன் ஒரு பெரும்படையை திரட்டி அந்த சூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்றார் விஜய்காந்த். இதனை பார்த்த ரஜினி ஒருநிமிடம் பயந்தே போய்விட்டார்.

பின்னர் தான் தெரிந்தது அது நம்ம கேப்டன் விஜயகாந்த் தான் என்று. விஜயகாந்தை பார்த்து ரஜினியே பயந்த இந்த விசயத்தை டெல்லி கணேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.

Advertisement