கடந்த 15ம் தேதி கோரதாண்டவமாடிய கஜா புயலால், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
‘கஜா’ புயலில் இருந்து மீண்டு வர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது.
மேலும், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும், இயக்குநர் ஷங்கர் 10 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.சமீபத்தில் விஜயகாந்த் 1 கோடி ருபாய் அளித்து வந்தார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிறையில் இருந்து கொண்டு நளினி, புயலால் பாதிக்கப்பட்ட கடந்த 4 நாட்களாகவே கஜா புயலால் மக்கள் அனுபவித்துவரும் வேதனைகள் குறித்து தனது வழக்கறிஞருடன் பகிர்ந்து வந்தார்.
இதையடுத்து தன்னால் பெரிய அளவில் உதவிகள் எதுவும் பண்ணமுடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இன்று(நவம்பர் 21) தனது வழக்கறிஞரை அழைத்த அவர், சிறையில் தனது உழைப்புக்கு ஊதியமாகக் கிடைத்த தொகையிலிருந்து ரூ.1000 வழங்க விரும்புவதாகவும், அதை முதல்வரின் கஜா புயல் நிதிக்கு வழங்கிவிடும்படியும் தெரிவித்திருக்கிறார்.