அஜித் எந்திச்சு நடக்குறதே கஷ்டம்-னு சொன்னாங்க..!ஆனா அவர் நடித்து கொடுத்தார்..!பிரபல இயக்குனர் பேட்டி..!

0
680
Ajith
- Advertisement -

தமிழில் மின்சார கனவு கனவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் ராஜீவ் மேனன்.தனது முதல் படத்திலேயே பிரபுதேவா, நாசர், அரவிந்த் சாமி கஜோல் என்று மல்டி ஸ்டார் படத்தை எடுத்த பெருமை இவருக்கு உண்டு.

-விளம்பரம்-

rajiivmenon

- Advertisement -

அதே போல இவரது இரண்டாவது படமான கண்டுகொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்திலும் அஜித், ஐஸ்வர்யா ராய், தபு,மம்முட்டி,அப்பாஸ் என்று பல மல்டி ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கி வரும் புதிய படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் `சர்வம் தாள மயம்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. டிசம்பர் 28 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜீவ் மேனன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித் நடித்த சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

-விளம்பரம்-

Ajith

இதுகுறித்து பேசியுள்ள அவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் போது அஜித்கிட்ட கதைச் சொல்லலாம்னு நினைக்கும் போது அவருக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. எல்லாரும், `அவர் எந்திச்சு நடக்குறதே கஷ்டம்; எப்படி நடிக்க வருவார்’னு சொன்னாங்க. நான் அவரை ஹாஸ்பிட்டலில் பார்த்து கதைச் சொன்னேன். அவரும், `நான் கண்டிப்பா நடிக்கிறேன்’னு சொன்னார். அதே மாதிரி பல சிரமங்கள் இருந்தாலும், வந்து நடிச்சுக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

Advertisement