நான் வேலைகாரியா இருக்கனுமா,எங்கள வாழ விடுங்க – காவல் நிலையத்தில் கதறும் ராஜ்கிரண் மகள்

0
471
rajkiran
- Advertisement -

பிரியா முனீஸ்ராஜா போலீசில் ஆஜராகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் சம்பந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

நாதஸ்வரம் சீரியலில் இவருடைய பேச்சும், ஸ்டைலும் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், பெரிய அளவில் இவருக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை அடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராக போட்டியிட்டு முனீஸ்ராஜா தோல்வி அடைந்திருந்தார்.

- Advertisement -

முனீஸ்ராஜா குறித்த தகவல்:

இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும், இவர்கள் காதலித்துக் கொண்டு தான் வந்தார்கள். பின் இவர்கள் பெற்றோர்களை மீறி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார்கள். முனீஸ்ராஜா வீட்டில் இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். அதே நேரம் ராஜ்கிரன் வீட்டிலும் ராஜ்கிரன் தன் மகளின் முடிவுக்கு சம்மதம் சொன்னதாக கூறப்படுகிறது.

முனீஸ்ராஜா- ஜீனத் திருமணம்:

ஆனால், ராஜ்கிரனின் மனைவி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனை ராஜ்கிரனின் மனைவி பத்மஜா என்கிற கதீஜா ராஜ்கிரன் முசிறி காவல் நிலையத்தில் முனீஸ்ராஜா- பிரியா மீது புகார் கொடுத்திருக்கிறார். அதில் அவர், முனீஸ்ராஜா பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து முனீஸ் ராஜா கூறியிருந்தது, என்னுடைய மனைவி பிரியாவை பெத்த அப்பா இப்ப எங்க கூட தான் இருக்கிறார். அவரும் பிரியாவை பெத்த அம்மா பத்மஜா என்கின்ற கதிஜா 18 வருஷமாக கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள்.

-விளம்பரம்-

முனீஸ் ராஜா அளித்த பேட்டி:

ஆனால், ஒரு கட்டத்தில் பத்மஜ தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து நடிகர் ராஜ்கிரன் உடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அப்போ என் மனைவி சின்ன குழந்தை. அவங்களையும் கூடவே கூட்டிட்டு போய்ட்டார்கள். பத்மஜா மட்டுமில்லை பிரியாவும் நிறைய நகைகளை அணிந்திருந்தார்கள். அந்த நகைகளோடு ராஜ்கிரனுடன் போய்விட்டார். இப்ப ராஜ்கிரன் பிரியாவை தன் மகளே இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு அவங்க போட்டிருந்த நகைகளை மட்டும் எதுக்கு அந்த வீட்டில் இருக்கணும் என்று பிரியாவை பெத்த அம்மாவிடம் கேட்டோம். அதற்கு தான் அந்த புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்.

பிரியா முனீஸ்ராஜா வீடியோ:

இந்நிலையில் இது குறித்து பிரியா முனீஸ்ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய கல்யாணம் எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது. என்னுடைய அம்மா ராஜ்கிரனின் சார் மனைவி பத்மா என்கிற கதீஜா ராஜ்கிரன் என் மீது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். என்னுடைய நகைகள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறது. அதைக் கேட்டதற்கு அவர் பொய்யான புகார் அளித்திருக்கிறார். என் மீது மட்டுமில்லாமல் என்னுடைய தந்தை, சகோதரர், கணவர் மீதும் புகார் அளித்திருக்கிறார். போலீசில் விசாரணைக்கு ஆஜராக சொல்லியிருக்கிறார்கள். இந்த தகவலை எல்லோரிடமும் தெரிவிக்க தான் சொன்னேன் என்று கூறியிருக்கிறார். பின் போலீசில் ப்ரியா-முனீஸ் ராஜா இருவரும் ஆஜராகி இருக்கிறார்கள்.

Advertisement