‘எனக்கு என் நகை வேண்டும்’ – போலீசில் புகார் அளித்த வளர்ப்பு மகள் – அன்றே ராஜ்கிரண் சொன்ன விஷயம் இன்று நடக்கிறது.

0
278
rajkiran
- Advertisement -

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா முனீஸ்ராஜா போலீசில் ஆஜராகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் சம்பந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

நாதஸ்வரம் சீரியலில் இவருடைய பேச்சும், ஸ்டைலும் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும், பெரிய அளவில் இவருக்கு சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதை அடுத்து கடந்த சட்டசபை தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராக போட்டியிட்டு முனீஸ்ராஜா தோல்வி அடைந்திருந்தார்.

- Advertisement -

முனீஸ்ராஜா குறித்த தகவல்:

இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும், முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும், இவர்கள் காதலித்துக் கொண்டு தான் வந்தார்கள். பின் இவர்கள் பெற்றோர்களை மீறி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார்கள். முனீஸ்ராஜா வீட்டில் இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

முனீஸ்ராஜா- ஜீனத் திருமணம்:

ஆனால், ராஜ்கிரனின் மனைவி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனை ராஜ்கிரனின் மனைவி பத்மஜா என்கிற கதீஜா ராஜ்கிரன் முசிறி காவல் நிலையத்தில் முனீஸ்ராஜா- பிரியா மீது புகார் கொடுத்திருக்கிறார். அதில் அவர், முனீஸ்ராஜா பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தனது 7 சவரன் நகை மற்றும் குடும்ப தாலியை பிரியா எடுத்து சென்று விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

நகை வேண்டும் :

இதையடுத்து காவல் நிலையத்தில் ஆஜரான பிரியா ‘என்னுடைய நகைகள் அவர்களுடைய வீட்டில் இருக்கிறது. அதைக் கேட்டதற்கு அவர் பொய்யான புகார் அளித்திருக்கிறார். என் மீது மட்டுமில்லாமல் என்னுடைய தந்தை, சகோதரர், கணவர் மீதும் புகார் அளித்திருக்கிறார்.எனக்கு என் அப்பா மற்றும் தாத்தா கொடுத்த நகை வேண்டும்’ என்றும் கூறி புலம்பி இருந்தார். ஏற்கனவே ராஜ்கிரண் அளித்த அறிக்கை ஒன்றில் அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது, எனக்குத்தெரிய வந்தது.

அன்றே சொன்ன ராஜ்கிரண் :

அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை. எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி, சினிமா துறையில் வாய்ப்புகளை பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக விசாரித்து தெரிந்து கொண்டேன். ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன்.ஆனால், தரங்கெட்ட, பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம் என்று கூறி இருந்தார்.

Advertisement