தன்னுடைய பெயருக்கான அர்த்தம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அளித்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் “நல்லி எலும்பு” என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது நடிகர் ராஜ்கிரண் தான். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, முனி, கொம்பன், வேங்கை, சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை சினிமா திரை உலகில் 30 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தினக்கூலியாக கஷ்டப்பட்டு தன் உழைப்பையும், நேர்மையையும் வைத்து இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.
ராஜ்கிரண் பேட்டி:
அதன் பின்னர் இவர் சொந்த விநியோக கம்பெனி ஆரம்பித்து படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இடையில் சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட ராஜ்கிரண் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ராஜ்கிரன் அவர்கள் தன்னுடைய பெயருக்கான விளக்கம் அளித்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய உண்மையான பெயர் மொய்தீன் அப்துல் காதர்.
பெயருக்கான விளக்கம்:
சினிமாவில் நடிக்க போறோம் என்பதால் தான் என் பெயர் மாற்றப்பட்டது. காரணம், என்னுடைய உண்மையான பெயர் வைத்தால் சினிமாவில் தனிமையாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் என்னுடைய நண்பர் j sound முடியும் பெயர் வைத்தால் புகழ் கிடைக்கும் என்று சொன்னார். என்னோட கம்பெனி பெயர் red sun. அதில் இருக்கிற சன் என்பது சூரியனிலிருந்து வருகிற கதிர் மாதிரி என்பது அர்த்தம். இதனால் கதிர் மாதிரி நானும் மக்கள் மத்தியில் பரவுவேன் என்று சொன்னார்.
மெய்யழகன் படம்:
அதனால் jல் முடியும் வகையில் ராஜ்கிரண் என்று பெயர் வைத்துக் கொண்டேன். இப்படித்தான் என்னுடைய பெயர் மாறியது என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழும் அரவிந்த்சாமி-கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘மெய்யழகன்’. இந்த படத்தை ’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. இதை அடுத்து நடிகர் ராஜ்கிரண் அவர்கள் சில படங்களில் நடித்து வருகிறார்.