ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் ராஜ்கிரண் – எந்த படத்துக்கு தெரியுமா ? கூட நடிச்சது யார்னு பாத்தா ஷாக் ஆகிடுவீங்க.

0
703
rajkiran
- Advertisement -

தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெருமை பெற்றவர் ராஜ்கிரண் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் “நல்லி எலும்பு” என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது நடிகர் ராஜ்கிரண் தான். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்காக இவர் ராஜ்கிரண் என்று பெயரை மாற்றி கொண்டார். இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே, கொம்பன், வேங்கை, சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை சினிமா திரை உலகில் 30 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

ராஜ்கிரண் திரைப்பயணம்:

மேலும், இவரே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். இவர் நடிப்புக்கு கூட கெட்டவனாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறும் உன்னதமான மனிதர். பெரும்பாலும், இவருடைய படங்கள் எல்லாம் கிராமப்புற காதல் காவியங்களை கொண்ட கதையாக இருக்கும். தற்போது ராஜ்கிரண் அவர்கள் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். முத்தையா இந்த படத்தை இயக்கி இருந்தார்.

ராஜ்கிரண் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி, அதிதி, பிரகாஷ்ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து ராஜ்கிரண் அவர்கள் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த பட்டத்து அரசன் படத்தில் நடித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் இந்த படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

ராஜ்கிரண் அளித்த பேட்டி:

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ என்ற பெருமை பெற்றவர் ராஜ்கிரண் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், எனக்கு ஒரு கோடி சம்பளம் தருவதாக சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஏன்னா, என்னுடைய 16 வயதில் சென்னைக்கு வந்து முதன்முதலில் நான் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா. அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். பின் என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தார்கள்.

முதல் படத்துக்கு ராஜ்கிரண் வாங்கிய சம்பளம்:

அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். பின்னர் அதை 170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். அந்த ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்தேன். இதையடுத்து சொந்தமாக விநியோக கம்பெனி ஆரம்பித்து படிப்படியாக சினிமாவில் வளர்ந்தேன். அதன்பின் நானே படம் இயக்கி நடித்தேன். அதெல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆனது. அதையடுத்து என்னை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடிக்க அழைத்தபோது 1 கோடியே பத்து லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாக சொன்னார்கள். இதை என் உழைப்புக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக தான் பார்த்தேன் என்று கூறி இருந்தார்.

மாணிக்கம் படம்:

இப்படி ராஜ்கிரண் அளித்த பேட்டியில் அவர் எந்த படத்துக்காக 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன் என தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த 1996-ம் ஆண்டு கே.வி.பாண்டியன் இயக்கத்தில் நடித்த மாணிக்கம் என்கிற படத்துக்காக தான் அவர் முதன்முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தான் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய தமிழ் ஹீரோ என்கிற அந்தஸ்தை பெற்று இருந்தார் ராஜ்கிரண். அதன் பின்னர் தான் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் அந்த அளவிற்கு சம்பளத்தை வாங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement