மகன் இயக்கத்தில் ராஜ்கிரண் – அதுவும் அவர் நடிப்பில் வெளியான இந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாம்.

0
485
rajkiran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் “நல்லி எலும்பு” என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகத்தில் வருவது நடிகர் ராஜ்கிரண். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். இவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை மாற்றி கொண்டார். இவர் இதுவரை சினிமா திரை உலகில் 30 படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார். மேலும், இவரே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.

-விளம்பரம்-
ராஜ்கிரண்

பின் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி, என்ன பெத்த ராசா, சண்டக்கோழி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா திரையுலகில் கதாநாயகனாக மட்டும்தான் நடித்துள்ளார். நடிப்புக்கு கூட கெட்டவனாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறும் உன்னதமான மனிதர். பெரும்பாலும் இவருடைய படங்கள் எல்லாம் கிராமப்புற கதைகளை மையமாகவும், காதல் காவியங்களை கொண்ட கதையாகவும் இருக்கும். தற்போது ராஜ்கிரண் அவர்கள் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : தொடரும் சோகம், 9 ஆண்டுகளுக்கு முன் 9 வயது மகன் தற்போது தந்தை – நடிகர் மனோகர் இன்று காலமானார்.

- Advertisement -

இந்நிலையில் தனது மகன் இயக்கும் படத்தில் ராஜ்கிரண் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தின் மூலம் தான் கஸ்தூரி ராஜா இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் ராஜ்கிரன், மீனா, வடிவேலு, கவுண்டமணி, செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று படத்தின் கதாநாயகன் ராஜ்கிரன் என்று சொல்லலாம். இந்த படத்தில் இவர் தொடை தெரியும் அளவுக்கு வேஸ்டி கட்டுவது, எலும்பு கடிப்பது போன்ற காட்சிகளில் நடித்து இருப்பார்.

இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க உள்ளார். மேலும், இந்த படத்தின் மூலம் இவர் சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதற்கிடையில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடித்து இருக்கிறார். பின் 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய் மாமனாக முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. ராஜ்கிரன் தற்போது மதுரையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். இதெல்லாம் முடிந்த பிறகு தன் மகன் இயக்கும் படத்தில் ராஜ்கிரண் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement