Wig, அசிஸ்டன்ட், அந்த நடிகை – Blast Mohanஐ விஜயுடன் ஒப்பிட்டு எல்லை மீறி கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்.

0
1976
Vijay
- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தில் ப்ளாஸ்ட் மோகன் என்ற கதாபாத்திரத்தை விஜயுடன் ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்துக்கொண்டு ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு கொண்டு இருக்கும் நிலையில் ஜெயிலர் படதில் வரும் ப்ளாஸ்ட் மோகன் கதாபாத்திரத்தை விஜயுடன் ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவரும் ரஜினிகாந்தை தான் சொல்வார்கள். ஆனால், சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் கலவரம் வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் படத்தின் பாடல்கள் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த பாடல் வரிகள் மட்டும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். மேலும், ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார்.

- Advertisement -

அதே போல ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது கடுப்பானார்கள்.இதனால் ஜெயிலரை failure ஆகிகுவோம் என்று விஜய் ரசிகர்கள் சபதம் போட்டனர். அதே போல சூப்பர் ஸ்டார் படத்திற்கு விஜய் ரசிகர்கள் சொந்தம் கொண்டாடியதால் ரஜினி ரசிகர்களும் விஜய் மீது கடும் கோபம் அடைந்தனர்.

இதனால் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்தே ரஜினி ரசிகர்கள் விஜயை ட்ரோல் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் விஜய் மற்றும் விஜய் ரசிகர்களை ரஜினி ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் படத்தில் வந்த பிளாஸ்ட மோகன் கதாபாத்திரத்தில் விஜயுடன் ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படத்தை ஒரு பேன் இந்தியா படமாக எடுக்கவே இயக்குனர் நெல்சன், மலையாள நடிகர் மோகன் லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப், கன்னட நடிகர் சிவராஜ்குமார் போன்றவர்களை நடிக்க வைத்து இருந்தார். அந்த வகையில் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தெலுங்கு நடிகர் சுனிலை போட்டு இருந்தார். ஆனால், மற்ற நடிகர்களை போல் அல்லாமல் இவருக்கு காமெடியான கதாபாத்திரமே கொடுக்கப்பட்டு இருந்தது.

மேலும், இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஆக வேண்டும், தன்னை பற்றி பெருமையாக பேச வேண்டும், தமன்னாவை காதலிக்க வைக்க வேண்டும் என்பது தான். இப்படி ஒரு நிலையில் இவரது கதாபாத்திரத்தை விஜயுடன் ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சுனில் வைத்து இருக்கும் விக்கை விஜயுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

மேலும், விஜய்யின் அசிஸ்டன்ட் ஜெகதீஸ் தான் ப்ளாஸ் மோகனின் அசிஸ்டன்ட் என்றும், தமன்னா தான் கீர்த்தி சுரேஷ் என்றும் கனக்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். இதெற்கெல்லாம் மேலே விஜய்க்கு வந்த IT ரைட், Cbi விசாரணை போன்றவற்றை எல்லாம் பிளாஸ்ட மோகன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகளை ரஜினி ரசிகர்களே அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement