குடி போதையில் மயங்கிவிட்டார்..! விஷால் பட ஹீரோயின் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

0
916
Vishal
- Advertisement -

தமிழில் காலா படத்தில் வில்லன் நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகர் நானா படேகர். தமிழில் ஏற்கனவே “பொம்மளாட்டம் ” படத்திலும் நடித்திருந்தார். தமிழில் பிரபலமான முகம் இல்லை என்றாலும் ஹிந்தியில் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் நானா படேகர் மீது பிரபல இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா திடுக்கிடும் பாலியல் குற்றசாட்டை முன்வைத்திருந்தார். இந்தியில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “மர்டர் ” படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷால் நடிப்பில் வெளியான “தீராத விளையாட்டு பிள்ளை ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிட்சியமானார்.

-விளம்பரம்-

- Advertisement -

நடிகை தனுஸ்ரீ தத்தா ஹிந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஹார்ன் ஓகே ப்ளீஸ் ” என்ற படத்தில் நடித்த போது நடிகர் நானா படேகர் பாடல் காட்சியின் போது தம்மிடம் தவறாக நடந்து கொண்டாதால் நடிகர் நானா படேகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் நடிகை தனுஸ்ரீ தத்தா. அதன் பின்னர் அவருக்கு பதிலாக நடிகை ராக்கி சாவந்த் அந்த பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நடிகை ராக்கி சாவந்த், ஒரு நாள் மாலை டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா எனக்கு போன் செய்து செட்டுக்கு வருமாறு கூறினார். அங்கு சென்ற போது ஒரே கூட்டமாக இருந்தது. என்ன என்று பார்த்தால் நடிகை தனுஸ்ரீ படப்பிடிப்புக்கு வரமால் நீண்ட நேரமாக கேரவனுக்குள் இருப்பதாக கூறினார்கள்.

-விளம்பரம்-

Tanu

எனக்கு தனுஸ்ரீ நன்றாக தெரியும் என்பதால் நான் அவருக்கு போன் செய்தேன். ஆனால், அவர் அதனை எடுக்கவில்லை. பின்னர் தனுஸ்ரீயின் மேக் அப் குழுவிடம் கேட்ட போது தனுஸ்ரீ அதிக அளவில் போதைப் பொருள் உட்கொண்டு அவர் 3 மணி நேரத்திற்கு மேலாக போதையில் மயக்கத்தில் உள்ளதாக கூறினாரகள். இதனை கேட்டு நான் மிகவும் அதிர்ந்து போனேன் என்று ராக்கி ஷவாந்த கூறியுள்ளார்.

Advertisement