காதலருடன் பிக் பாஸ் வருகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்ச்சை நடிகை.!

0
1175
Bigg-Boss-3
- Advertisement -

தமிழில் ஒரு சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர் நடிகை ராக்கி சவந்த். இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார். மல்லியுத்த போட்டியில் கலந்துகொண்டு முதுகை உடைத்துக்கொண்டது. நடிகை மீது செக்ஸ் புகார் என்று இவர் கிளப்பிய சர்ச்சை ஏராளம்.

-விளம்பரம்-
Image result for rakhi sawant bigg boss

இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது . தமிழில் ஒளிபரப்பாவது போல பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பிரபலம். ஹிந்தியில் பதிமூன்றாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது. அதையும் வழக்கம் போல சல்மான் கான் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

- Advertisement -

தமிழில் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது. மேலும், மராத்தியில் சென்ற வாரம் பிக்பாஸ் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார் என்ற செய்திகளும் பாலிவுட் வட்டாரத்தில் அடிபட்டு கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் பாலிவுட்டின் சர்ச்சை நடிகை ராக்கி சாவந்த் தான் பிக்பாஸ் 13க்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவரது காதலர் என கூறப்படும் தீபக் என்பவருடன் தான் அவர் ஜோடியாக வரவுள்ளார்.இந்த தகவலை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துளளார்.

-விளம்பரம்-
Advertisement