குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஏன் ? – ரக்ஷன் கொடுத்த விளக்கம்.

0
430
rakshan
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதியில் ரக்ஷன் பாதியிலேயே வெளியேறியது குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-
cookuwithcomali

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 3 :

தற்போது இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து இருக்கிறது. இதில் வருடம் வருடம் போட்டியாளர்கள் மாறினாலும் கோமாளிகள், நடுவர்கள், தொகுப்பாளர்கள் என எல்லோருமே முதல் சீசனில் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரக்சன் திகழ்ந்து கொண்டிருந்தார். இவர் தொகுப்பாளராக மட்டுமில்லாமல் கோமாளியாகவும் இருந்தார். தற்போது விஜய் டிவியில் மிக பிரபலமான தொகுப்பாளராக ரக்ஷன் திகழ்கிறார்.

ரக்ஷன் குறித்த தகவல்:

இவர் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தான் தொகுப்பாளராக இருந்தார். ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. இதன் மூலம் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் துல்கர் சல்மான் நடித்து இருந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலமாக ரக்ஷன் வெள்ளித்திரையில் நடிகராக மாறி இருந்தார்.

-விளம்பரம்-

இறுதி நிகழ்ச்சியில் ரக்ஷன் வராத காரணம்:

அதற்கு பிறகு ரக்ஷனுக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் விஜய் டிவி பக்கமே வந்துவிட்டார். பின் ரக்ஷன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி இருந்தார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ரக்ஷன் காணவில்லை. இதுகுறித்த காரணம் பலரும் கேட்டிருந்தார்கள். இந்நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் ரக்சன் கூறியிருப்பது, நிகழ்ச்சியின் இறுதியின் போது எனக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது.

ரக்சன் ஹீரோவாக நடிக்கும் படம்:

கொரோனாவாக இருக்குமோ? என்று பார்த்தால் அதுவும் இல்லை. என் தனிப்பட்ட சில காரணங்களால் என்னால் இறுதி நிகழ்ச்சியில் வர முடியவில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், ரக்சன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த படத்தை இரா.கோ.யோகேந்திரன் இயக்குகிறார். இந்த படம் உணர்வுபூர்வமான காதல், நட்பு உறவுகளை மையமாகக் கொண்டு அனைவரும் ரசிக்கும் கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது.

Advertisement