ஜாக்குலினுடன் எனக்கு காதலா..! உண்மையை உடைத்த ரக்‌ஷன் ! என்ன சொன்னார் தெரியுமா ?

0
2163
rakshan and jacqueline

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தபோது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கிவிட்டார் தொகுப்பாளர் ரக்‌ஷன். ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும், தனக்கான வெளிச்சம் கிடைக்காமல் இருந்தவருக்கு, இப்போது வெள்ளித்திரையின் வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

rakshan

துல்கர் சல்மானின் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரக்‌ஷனிடன் பேசினேன்.

உங்களையும் ஜாக்குலினையும் சேர்ந்து வைத்து நிறைய செய்திகள் வருதே..?

’’ஆமா ப்ரதர். எல்லாரும் நினைக்கிற மாதிரி நானும் ஜாக்குலினும் அவ்வளவு க்ளோஸ் கிடையாது. வொர்க்கைத் தாண்டி நானும் அவங்களும் அதிகமா பேசிக்கிட்டது கிடையாது; வெளிய மீட் பண்ணிக்கிட்டது கிடையாது. ஆனால், வேலைன்னு வந்துட்டா நாங்க ஒருத்தரைத் ஒருத்தர் விட்டுக்கொடுக்காம இருப்போம்.

rakshan

இதேமாதிரி ஜூலியையும் என்னையும் சேர்த்து வெச்சு சில செய்திகள் வந்துச்சு. ஜாக்குலின் என்கூட சேர்ந்து ஷோ பண்றாங்க, அதனால வதந்தி வர்றது இயல்புதான். ஆனால், நான் ஜூலிகூட பேசுனதேயில்ல.

எப்படி எங்களைப் பத்தி இவ்வளவு வதந்தி வந்துச்சுன்னே தெரியலை. அவ்வளவு வதந்தி வந்தபோதும் நான் அவங்களுக்கோ, அவங்க எனக்கோ போன் பண்ணி, ’என்ன இப்படியெல்லாம் வதந்தி வருது’னு பேசிக்கிட்டதில்ல.