கொரோனவால் படப்பிடிப்பை நிறுத்த முடியாவில்லை. ரகுல் சிங் பதிவிட்ட புகைப்படம்.

0
1261
rakul
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது பயங்கர அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

-விளம்பரம்-

இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஆகவே படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

- Advertisement -

இதனால் சினிமா பிரபலங்கள் எல்லாம் வருத்தத்தில் உள்ளார்கள். இந்த கரோனா வைரஸ் குறித்து பல்வேறு பிரபலங்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்த கரோனா வைரஸ் குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை.

-விளம்பரம்-

இவர் தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஸ்பைடர், தீரன், தேவ், என்ஜிகே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர் ரவிக்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். தற்போது இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தியன் 2 படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் மட்டும் நடந்து உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை நாளை முதல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பில் தளத்திலிருந்து நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை போட்டு இருந்தார். நடிகை ராகுல் பிரித் சிங் அவர்கள் தன்னுடைய இந்தியன் 2 படத்தின் படக்குழுவினருடன் மாஸ்க் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியது, தேவை இல்லாமல் தயவு செய்து வெளியே செல்ல வேண்டாம். இன்றைய படப்பிடிப்பை எங்களால் ரத்து செய்ய முடியவில்லை. அதனால் முழு அணியும் முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகின்றன. அனைவரும் புத்திசாலியாக கரோனா வைரசை புன்னகையுடன் எதிர்த்துப் போராடுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இவர் இப்படி பதிவிட்ட கருத்து சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும், வலிமை, மாநாடு போன்ற படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement