தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரகுல் பிரித் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல இந்தி மற்றும் கன்னட மொழி கூட திரைப் படங்களில் நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் அவர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். முதலில் இவர் ரீமேக் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தது. இதனை தொடர்ந்து ரகுல் பிரித் சிங் ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் தீரன், ஸ்பைடர், தேவ், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் இவர் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தில் நடித்து வருகிறார். மேலும்,நடிகை ரகுல் பிரித் சிங் அவர்கள் தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அதில் அவர் பேசியது, சினிமா நடிகைகள் எல்லாரும் வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுப்பது ரொம்ப முக்கியம். அது மட்டும் இல்லாமல் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாக இருந்தால் அதற்கும் நாம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்நிலையில் இதற்கு முன்பு செய்த தவறுகளை திருத்திக் கொண்டு அதற்கேற்றவாறு மாற்றி செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறேன். மேலும், நான் ஹிந்தி மொழியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். இது தவிர மேலும், மூன்று படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதையும் பாருங்க : நடிகையை காதலிக்காதே என்று அஜித்திடமே சொன்ன நடிகர். ஷாலினி அஜித்தின் ஒரு ஸ்பெஷல் பிளாஷ் பேக்.
இதனைத்தொடர்ந்து சினிமா நடிகர்கள் எல்லாருமே பார்ட்டிகளுக்கு போனால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று பேசுகிறார்கள். இது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த மாதிரி பார்ட்டிகளுக்கு போனால் அங்கு தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம். மேலும், ஒரு பட வாய்ப்பும் கிடைக்காது. சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைப்பது அவர்களுடைய திறமையை வைத்து தான். அதுமட்டும் இல்லாமல் ஒருவருக்கு திறமை இருந்தால் சினிமாவில் அவர்களுக்கு பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரும் என்று வெளிப்படையாகக் கூறினார். இவருடைய இந்த தைரியமான பேச்சும், தன்னம்பிக்கையையும் பாராட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.
மேலும், இவருடைய இந்தியன் 2 படம் குறித்து பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரீத் சிங்கும் ஒருவர். மேலும், இவரை குறித்து பல விமர்சனங்களும், கருத்துக்களும் சமூக வலைத் தளங்களில் வந்துள்ளன. சமீபத்தில் கூட பாகுபலி ராணாவும், நடிகை ரகுல் பிரீத் சிங் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற தகவல் வந்தது. இது குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். இதே போல் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சமூக வலைத்தளங்களில் ரகுல் பிரீத் சிங் குறித்து பல கருத்துக்கள் எழுந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன. மேலும், பார்ட்டி குறித்தெல்லாம் ரகுல் ப்ரீத் சிங் ஏன் இப்படி பேசு கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.