தனது காதலரை அறிமுகம் செய்த நடிகை ரகுல் பிரீத் சிங், யாருனு பாருங்க (பாலிவுட்ல புடிச்சிட்டு இருக்காரு)

0
2471
rakul-preet-singh
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக நடிகை ரகுல் பிரித் சிங் திகழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் அவர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் ‘தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் தீரன், ஸ்பைடர், தேவ், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது நடிகை ரகுல் பிரித் சிங் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தில் நடிக்க உள்ளார். இது தவிர இவர் பிற மொழி படங்களிலும் நடிகை ரகுல் பிரித் சிங் பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இந்த சீசனின் முதல் ரெட் கார்டு ?இந்த பிரச்சனையினால் தான் நமீதா வெளியேற்றப்பட்டாரா ? ஷாக்கிங் தகவல்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய காதல் குறித்து சோசியல் மீடியாவில் பகிரங்கமாக அறிவித்து உள்ளார். நடிகை ராகுல் பிரீத் சிங் அவர்கள் தனது பிறந்த நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான Jackky Bhagnani-யை காதலிப்பதாக கூறி உள்ளார். மேலும், தன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.

அதேபோல் Jackky Bhagnani அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ராகுலுடன் காதல் உறவில் இருக்கிறேன் என்று பதிவிட்டு தாங்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் எப்போது திருமணம் என்று கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement