விண்வெளிக்கு செல்வதைப்போல உணர்கிறேன் – டெல்லிக்கு விமானத்தில் பறந்த கார்த்திக் பட நடிகை.

0
542
rakul

கொரோனா வைரஸ் தொற்றால் நாடே கதி கலங்கி போய் உள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. பாதுகாப்பாக இருக்க முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பராமரித்தல், கை சுத்தம் பராமரித்தல் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு சுய பாதுகாப்பு கவசங்களை அணிந்து விமானத்தில் பறந்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு நேற்று விமானத்தில் சென்றார். கொரோனா வைரஸை எதிரித்து போராடி வருகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் அணிந்து கொள்கிற பி.பி.இ. என்று அழைக்கப்படும் சுய பாதுகாப்பு கவசங்களை (முக கவசம், கையுறைகள், ஷூ கவர் உள்ளிட்டவை) அணிந்து கொண்டு நடிகை ரகுல் பிரீத் சிங் விமானத்தில் பறந்தார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமலா இவர் ‘மிஷன் டெல்லி’ என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது, ஹாய் நண்பர்களே, நம் நாட்டிற்கு இந்த நிலைமை வரும் என்று யாரும் எதிர் பார்க்க இல்லை. நாம் இப்படியெல்லாம் (தனது சுய பாதுகாப்பு கவசங்களை சுட்டிக்காட்டி) பயணிக்க வேண்டி இருக்கும் என்று யாரேனும் நினைத்து இருப்போமா? ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து நான் அட்டாக் படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்துக்காக வேலை செய்து வருகிறோம்.

நாங்கள் எல்லோரும் தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறோம். அதோடு நான் விண்வெளிக்கு செல்வதைப்போல உணர்கிறேன் என கூறினார். தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ரகுல் பிரித் சிங். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement