இப்படி ஒரு சாவல் இருக்கா என்ன ? கார்த்திக் பட நடிகை செய்த வித்தையை பாருங்க. வீடியோ இதோ.

0
800
rakul
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக ரகுல் பிரித் சிங் திகழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் தான் இவருக்கு சினிமாத் துறையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் இவர் ரீமேக் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் நிறைய வந்தது. நடிகை ரகுல் பிரித் சிங் அவர்கள் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் தீரன், ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இவர் அதிகம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் தான் நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் அவர்கள் சைவத்திற்கு மாறி இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தன் வாழ்வில் எடுத்திலேயே சிறந்த முடிவு என்று கூறி இருந்தார். மேலும், இப்போது அவர் உடல் எடை குறைந்தும், ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருப்பதாக உணருகிறேன் என்று கூறி இருந்தார். இந்நிலையில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதுவிதமான சேலஞ்சை செய்துள்ளார்.

அதில் ராகுல் ப்ரீத் சிங் அவர்கள் தலைகீழாக நின்று கொண்டே தன்னுடைய ஆடையை(சட்டை ) அணிந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் இந்த புதிய சேலஞ்சை அனைவரும் செய்து வருகிறார்கள். எல்லா நடிகைகளும் இந்த புதிய சேலஞ்சை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றன. இதெல்லாம்மா பண்ணுவீங்க?என்று இதற்கு பலர் ஆதரவையும், பலர் விமர்சனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

தற்போது ராகுல் பிரீத் சிங் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்திலும் ராகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஹிந்தியில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement