காதலனை கரம் பிடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் – மாப்பிள்ளை யார் தெரியுமா?

0
546
RakulPreeth
- Advertisement -

தன்னுடைய காதலனை நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் ஜாக்கி பாக்னானி என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர் ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமாக இருக்கிறார். பின் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரருமே சம்மதம் தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-

இதனை அடுத்து இவர்களுடைய திருமணம் நேற்று கோவாவில் கோலாகலமாக நடந்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே இவர்களுடைய திருமண ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்திருந்தது. மேலும், ரகுல் மற்றும் ஜாக்கி இருவரும் தங்களுடைய திருமணத்தை பசுமை திருமணம் என்ற பெயரில் நடத்தி இருக்கிறார்கள். அதாவது, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இவர்களை திருமணம் நடத்தி இருக்கிறார்கள். இதனால் பலருமே இவர்களை பாராட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

பசுமை திருமணம்:

இவர்களுடைய திருமணத்தில் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் பட்டாசுகள் எதுவும் பயன்படுத்தவில்லை. உணவிலும் சர்க்கரை, எந்தவித செயற்கையான கலர்ஸ் போன்றவற்றை பயன்படுத்தாமல் ஆரோக்கியமான உணவுகள் தரப்பட்டு இருக்கிறது. மேலும், தங்களை வாழ்த்த வந்த விருந்தினருக்கு சிறப்பு பரிசாக செடிகள் மற்றும் விதைகளை ரகுல் மற்றும் ஜாக்கி கொடுத்திருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் ஆனந்த்ராஜ் மற்றும் சிந்தி பாணியில் அதாவது, சீக்கிய மற்றும் ஹிந்து முறையில் நடந்திருக்கிறது.

ரகுல் ப்ரீத் சிங் திருமணம் குறித்த தகவல்:

இவர்களுடைய திருமணத்தில் இரு வீட்டார் உடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில்பா செட்டி, அர்ஜுன் கபூர், வருண் தவான், ஆதித்யா ராய் கபூர், அனன்யா பாண்டே, ஷாகித் கபூர், சாரா அலிகான் போன்ற பாலிவுட் பிரபலங்களும் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்தில் நடிகை ரகுல் அவர்கள் பேபி பிங்க் ஷேடுடன் உடன் கூடிய லெகங்காவில் அணிந்திருந்தார். அவருடைய கழுத்தில் பெரிய வைரத்தால் ஆன சோக்கர் ஒன்றை அணிந்திருந்தார்.

-விளம்பரம்-

குவியும் வாழ்த்துக்கள்:

ஜாக்கி அவர்கள் கோல்டன் கிரீன் கலர் உடையில் ஆடை அணிந்திருந்தார். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரகுல் ப்ரீத் சிங் அவர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் படத்தில் நடித்து இருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் திரைப்பயணம்:

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ஏலியன் ஜனரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதோடு பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது ரகுல் ப்ரீத் சிங் அவர்கள் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது,.

Advertisement