ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா? இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சை பேச்சு – முழு விவரம் இதோ

0
152
- Advertisement -

ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழி துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தெலுங்கு மொழி படத்தின் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் படங்களை இயக்கியும் தயாரித்தும் வந்தார். தமிழில் இவர் சத்யா, கம்பெனி, சர்க்கார் போன்ற படங்கள் எல்லாம் இயக்கியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினி குறித்து ராம் கோபால் வர்மா கூறியிருப்பது, நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தது. நட்சத்திரம் என்பது ஒரு நடிப்பை பொறுத்தது.

- Advertisement -

ராம் கோபால் வர்மா பேட்டி:

இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ரஜினிகாந்த் நல்ல நடிகரா? என்று கேட்டால் எனக்கு தெரியாது. ரஜினிகாந்தால் சத்யா படத்தில் மனோஜ் பாய் நடித்திருந்த பிக்கு மாத்ரே கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்றால் என்னால் நம்ப முடியாது. ரஜினிகாந்தை அப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஸ்லோ மோஷன் ரஜினிகாந்த் அப்படி இருக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். ரஜினிகாந்த் எப்போதுமே படத்தில் பாதி நேரம் எதுவும் செய்யாமல் நடந்து கொண்டே தான் இருப்பார்.

ரஜினி குறித்து சொன்னது:

அதை கண்டு கவலைப்பட தேவையில்லை. அது தான் அவருக்கு அதிக ரசிகர்களை வாங்கித் தந்திருக்கிறது. ரஜினிகாந்த், அமிதாப் போன்றவர்கள் எல்லாம் மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஒரு கேரக்டராக மாறுவது என்பது கஷ்டமான ஒன்று. ஒரு நட்சத்திரம் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்கும் போது ரசிகர்களிடம் ஏமாற்றமாக இருக்கும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

ரஜினி திரைப்பயணம்:

தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளிவந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார்.

ரஜினி படங்கள்:

இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து ரஜினியின் 171 வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement