கொரோனா வைரஸில் இருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற அனைத்து நாட்டு அரசுகளும் தீவிரமாக உயிரை கொடுத்து போராடி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4067 பேர் பாதிக்கப்பட்டும், 109 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸை தடுக்க மோடி அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.

மேலும், பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மக்களிடம் கொரோனா வைரஸ் குறித்து உரையாற்றி இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு ஒன்பது நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அனைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையும் பாருங்க : என்ன சிங்கப்பெண்ணே இதெல்லாம். பிகில் நடிகையின் கிளாமரை பார்த்து அசந்து போன நெட்டிசன்கள்.

Advertisement

இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் அனைவரும் நேற்றிரவு 9 மணி 9 நிமிடங்கள் இந்தியா முழுவதும் பல்புகளை அணைத்து அகல் விளக்கு, மொபைல் டார்ச், மெழுகுவர்த்தி மூலம் ஒளி காட்டி இருந்தார்கள். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் வீட்டில் விளக்கு மற்றும் மெழுகுவத்தி போன்றவற்றைகளை ஏற்றி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா, விளக்கிற்கு பதிலாக சிகெரெட்டை பற்ற வைத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் அரசாங்கம் புகை பிடிப்பது குறித்து எச்சரிக்கை செய்தும் அதனை பின்பற்றாதது எப்படி ஆபத்தானது அதைவிட ஆபத்தானது கொரோனா எச்சரிக்கையை பின்பற்றாதது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : ஜாக்கிங் சென்ற நடிகையை கடித்து குதறிய தெரு நாய்கள். மருத்துவமனையில் சேர்த்த அக்கம் பக்கத்தினர்.

Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களை பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். சூர்யாவை வைத்து ரத்த சரித்தாராம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement