திருமணத்திற்கு பின் ஆளே மாறிப்போன ‘ராம்’ பட நடிகை. அவரின் தற்போதைய நிலை.

0
3488
gajala

ராம் படம் நடிகை கஜாலாவை ஞாபகம் இருக்கிறதா??? தற்போது அவர் எப்படி இருக்கிறார், என்ன செய்து இருக்கிறார் ? என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்… நடிகை கஜாலா அவர்கள் ‘யுனிவர்சிட்டி’ என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். 2005 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் தான் ராம். இதில் ஹீரோவாக ஜீவாவும், ஹீரோயினாக கஜாலாவும் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் பல விருதுகளையும் இந்த படம் வாங்கியது. இந்த படத்தின் மூலம் தான் நடிகை கஜாலா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர் என்றும் சொல்லலாம்.

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளி வந்த ஏழுமலை படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டார். நடிகை கஜாலா அவர்கள் ஜோர் படத்தில் இடம் பெற்ற ‘மம்மி செல்லமா.. டாடி செல்லமா’ என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து நடிகை கஜாலா அவர்கள் ராம், மதராசி, ராமன் தேடிய சீதை, எம்டன் மகன், நீ வேணும்டா செல்லம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் என்பவருடன் காதல் என்று சில மாதங்களாக கிசுகிசு வந்தது. பின்னர் காதலில் சிக்கி மனம் விரக்தி ஆகி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு முயன்றார் என்றும் பேசப்படுகிறது. இவர் 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான துரை என்ற படத்தில் தான் தமிழில் கடைசியாக நடித்தார். மேலும், இவர் 2011 ஆம் ஆண்டு மணி மணி மோர் மணி என்ற தெலுங்கு படத்தில் தான் இவர் கடைசியாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து கொண்டு இருந்தார்.

பின் அவருடன் சீரியலில் நடித்த நடிகர் பைசல் அலி கான் என்பவரை காதலித்தார். மேலும், இவர்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தார்கள். இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின் சமூக நலம் பற்றி படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். தற்போது படிப்பு முடிந்தவுடன் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக திரும்பி உள்ளார் என்று பேசப்படுகிறது. அத்துடன் சமூக சேவையும் தொடர்ந்து செய்து வருகிறாராம்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே சோசியல் மீடியாக்களில் நடிகை கஜாலா அவர்களின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது அவருடைய பட வாய்ப்புக்காக இருக்குமோ?? என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அப்போது நடிகை கஜாலா அவர்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement