கையில் மிகப்பெரிய மது பாட்டில் பரிசு.! பிறந்தநாளன்று சர்ச்சையில் சிக்கிய சார்மி.!

0
855
- Advertisement -

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவிதில்லை என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை சார்மி கவுர். அதன் பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை சார்மிக்கு மவுசு ஏற்பட்டு அங்கே பல படங்களில் நடித்து விட்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

சமீப காலமாக படங்களில் நடிப்பதில் முற்று போட்ட சார்மி தற்போது பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தாயரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். 
தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராகவும் , தயாரிப்பாளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூரி ஜெகன்நாத். மேலும் தெலுங்கில் போக்கிரி, பிசினஸ் மேன் போன்ற படங்களை இயக்கியவர்.

இவர் நடிகை சார்மியுடன் கள்ள தொடர்பில் இருப்பதாக சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மறுத்து கடுமையாக பேசியிருந்தார் சார்மி. இப்படி ஒரு சர்ச்சை போய்க்கொண்டிருக்க தற்போது மீண்டும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார் சார்மி.

-விளம்பரம்-

நடிகை சார்மி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் சார்மி தயாரித்து வரும் படத்தின் ஹீரோ ராம் ஒரு பெரிய பரிசை பார்சலாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாக அதில் இருப்பது விஸ்கி பாட்டில் தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertisement