ரஜினி படத்தின்நிர்வாகியாக பா.ம.க இளைஞரணித் தலைவர், ரஜினி vs பா.ம.க – அன்று நடந்தது என்ன?

0
388
rajini
- Advertisement -

ரஜினி படத்தின் தயாரிப்பு நிர்வாகி பாமக இளைஞரணி தலைவர் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயில் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவர்கள் இரண்டு படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதில் ஒன்று, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கம் படம். இன்னொன்று விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இந்த படத்திற்கான தொடக்க விழா கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த இரு படங்கள் குறித்து அறிவிப்பு ரஜினி மற்றும் தயாரிப்பு தரப்பால் உறுதி செய்யப்பட்டததற்கான செய்தியும் புகைப்படங்களும் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. மேலும், ரஜினி நடிக்க இருக்கும் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கும் லைக்கா தயாரிப்பு நிர்வாகியாக ஜி கே எம் தமிழ் குமரன் இருக்கிறார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் ஜி கே மணியின் மகன். ஜி கே எம் தமிழ் குமரன் இப்போது இளைஞரணி தலைவர் ஆவார்.

-விளம்பரம்-

ரஜினி vs பா.ம.க கட்சி :

இந்நிலையில் ரஜினி vs பா.ம.ககட்சி இடையே நடந்த சர்ச்சை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ரஜினி சந்தன கடத்தல் வீரப்பனை கைது செய்ய வேண்டும் என்று பேசி இருந்தார். ரஜினியின் இந்த பேச்சு பாமக தலைவர் ராமதாசை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றிருந்தது. இதனால் அவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினியை விமர்சித்து பேசி இருந்தார். உண்மையான வன்னியர்கள் இனி ரஜினி நடிக்கும் படங்களை பார்க்க கூடாது என்றெல்லாம் பேசி இருந்தார். ராமதாஸின் இந்த பேச்சை ரஜினி ரசிகர்கள் மத்தியில் கோவத்தை உருவாக்கி இருந்தது.

பாபா பட பிரச்சனை :

அதனால் ராமதாஸின் உருவ பொம்மையை ஆங்காங்கே எறித்து இருந்தார்கள். பிறகு இந்த பிரச்சனை பாமக தொண்டர்கள் vs ரஜினி ரசிகர்கள் என்று ஆனது. அப்போது தான் ரஜினி நடித்த பாபா படம் ரிலீஸ் ஆனது. பாமக வலுவாக இருக்கும் வட தமிழ்நாட்டின் பல ஊர்களில் இந்த படம் வெளியிடப்படவில்லை. தியேட்டர் உரிமையாளர்கள் பலர், எதற்கு வம்பு என்று பயந்தார்கள். பாபா படம் வெளியான சில தியேட்டர்களில் திரை கிழிப்பு, படப்பெட்டி கடத்தல் போன்ற பல அசம்பாவீதங்கள் நடந்தது. அது மட்டும் இல்லாமல் பாபா படம் அப்போது படும் மோசமான விமர்சனத்தையும் சந்தித்திருந்தது. இது குறித்து பாமக தலைவர் ஜிகே மணியின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அப்போது அவர், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் படத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. படம் மோசமாக இருப்பதினால் தான் தோல்வி அடைந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி பாமக- ரஜினி இடையே இந்த பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. பின் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வெளியானதை ராமதாஸ் கிண்டல் கேலி செய்திருந்தார். அதோடு ரஜினியை கண்டு பயந்து தான் பாமகவினர் அவரை எதிர்க்கிறார்கள் என்று ரஜினி ரசிகர்கள் கூறி இருந்தார்கள். இப்போது வரை இந்த அதிர்ச்சி பாமக தொண்டர்கள் இடையே இருக்கிறது. இதனால் தான் பாமகவின் முக்கியமான பதவி கிடைத்த அடுத்த சில தினங்களில் ரஜினியை ஜி கே எம் குமரன் நேரில் சந்தித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement