‘கீர்த்தி சுரேஷ் என் மனசுலயே நிக்குறாங்க’ – இதுதான் காரணமாம். ராமராஜன் பேட்டி.

0
287
keerthy
- Advertisement -

கீர்த்தி சுரேஷ் என் மனதிலேயே நிற்கிறார் என்று ராமராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் இவர் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும். இவர் 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார்.

-விளம்பரம்-
ramarajan

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இன்னும் கரகாட்டக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. இதனிடையே ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ராமராஜன் திரைப்பயணம்:

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பின் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி. தற்போது நளினி சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதேபோல் ராமராஜன் அரசியலில் குதித்தார். இவர் இதுவரை ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்திருந்தார். மேலும், ராமராஜன் தன்னுடைய அரசியலில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். இடையில் 2012 ஆம் ஆண்டு மேடை என்ற படத்தில் ராமராஜன் நடித்திருந்தார்.

ramarajan

ராமராஜன் நடிக்கும் படம்:

தற்போது மீண்டும் ராமராஜன் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர் சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஐந்து மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

ராமராஜன் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ராமராஜன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கீர்த்தி சுரேஷ் குறித்து கூறியிருந்தது, எல்லோருமே தற்போது நன்றாக தான் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் டிவியில் தான் பாடல்கள், காமெடி எல்லாம் பார்க்கிறேன். சினிமாவில் வரும் ஹீரோக்கள் பல கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டி தான் அந்த இடத்தில் வந்து நிற்கிறார்கள். கஷ்டப்படாமல் யாரும் வந்திருக்க மாட்டார்கள். அதனால் தான் ஒருத்தரோட இடத்தை இன்னொருத்தரால் நிரப்பிட முடியாமல் இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் குறித்து சொன்னது:

இங்கே திறமை, உழைப்பு எல்லாம் தாண்டி நேரம், காலமும் அமையனும். அந்த காலத்து கதாநாயகிகளில் சரோஜாதேவி, சாவித்திரி, கே ஆர் விஜயா என்ற எல்லோரும் இன்றும் எல்லாருடைய மனதிலுமே இருக்கிறார்கள். இப்போ அப்படி கீர்த்தி சுரேஷ் தான் இருக்கிறார். காரணம் என்னவென்றால், அவர் நடிகையர் திலகம். அதில் அவரின் எப்பேர்பட்ட நடிப்பு. அதேபோல் மனோரமா ஆட்சி ஆயிரம் படங்கள் நடித்து இருக்கிறார். அந்த பெருமை இப்போ யாருக்குமே இல்லை என்று கூறியிருந்தார்.

Advertisement