இதனால்தான் ‘சாமானியன்’ படம் வெற்றிபெறவில்லை – தயாரிப்பாளர் மீது ராமராஜன் மீது குற்றச்சாட்டு

0
181
- Advertisement -

‘சாமானியன்’ படம் தோல்வி அடைந்ததற்கு தயாரிப்பாளர் தான் காரணம் என்று நடிகர் ராமராஜன் குற்றம் சாட்டி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாமானியன். இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், கே.எஸ். ரவிக்குமார் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்து இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் படத்தில் இயக்குனர் காண்பித்திருக்கிறார். படத்தில் பரபரப்பாக ஒரு வங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டு இருக்கிறார்கள். அப்போது சாமானிய மனிதன் ஒருவன் அந்த வங்கிக்குள் நுழைந்து டைம் பாம், துப்பாக்கி போன்ற பொருட்களை எல்லாம் காட்டி மேனேஜரை மிரட்டுகிறார்.

- Advertisement -

சாமானியன் படம்:

வங்கியில் உள்ள எல்லோருமே பயந்து விடுகிறார்கள். பின் அந்த வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் அந்த சாமானியன் கொண்டு வருகிறார். இந்த சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்து வங்கியை போலீஸ் சூழ்ந்து விடுகிறது. பின் மீடியாவிற்கும் இந்த விவகாரம் தெரிய வருகிறது. வங்கியையும் அங்கு இருக்கும் மக்களையும் மீட்க அந்த சாமானியன் கோரிக்கை வைக்கிறார். அவர் வைக்கும் கோரிக்கைக்கு போலீஸ் ஒத்துழைத்ததா? அந்த சாமானியன் யார்? அவன் ஏன் வங்கியை கொள்ளையடிக்க வந்தான்? அவன் வைத்த கோரிக்கை தான் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

ராமராஜன் ரிட்டன்ஸ் :

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜனை திரையில் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விட்டார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் சாமானியன் படம் வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தினுடைய புரோமோஷன் பணியின் போது நடிகர் ராமராஜன் பேட்டியில், தமிழ்நாட்டில் எளிய மக்களுக்கும் பொழுதுபோக்காக சினிமா இருக்கிறது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் சினிமா உடைய கட்டணத்தை குறைக்க வேண்டும்.

-விளம்பரம்-

ராமராஜன் பேட்டி:

35 வருடங்களுக்கு முன்பு வந்த என்னுடைய ‘கரகாட்டம்’ படத்திற்கு எந்த அளவு வரவேற்பு இருந்ததோ அதே மாதிரிதான் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. சாமானியன் படத்திற்கு தேவையான எல்லா விஷயத்தையும் செய்து படத்தின் ஆபரேஷனை சக்சஸ் ஆக முடித்து கொடுத்து ஒரு குழந்தையாக படத்தை வெளியிட்டோம். ஆனால், வெளியே வந்த குழந்தையை தயாரிப்பாளர் கொன்றுவிட்டார்.

தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு:

படத்திற்கு அவர் எந்த விளம்பரமும் செய்யவில்லை. இப்படி இருக்கும்போது படம் எப்படி ஓடும். பேப்பர், டிவி என்று எதிலுமே அவர் விளம்பரம் கொடுக்கவில்லை. இதையெல்லாம் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்தார்கள் என்றால் அது ராமராஜனுக்காக தான். இது என்னுடைய 46-வது படம். ஒன்றரை வருடமாக இந்த படம் வெளியாக பிரச்சனை இருந்தது. அதோடு எனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியமும் அவர் தரவில்லை. இந்த படம் மிகப்பெரிய அளவில் போக வேண்டியது. ஆனால், தயாரிப்பாளர் சரியாக அதை விளம்பரப்படுத்தவில்லை. அதனால் தான் படம் வெற்றி பெறவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement