ரஜினி 30000 சம்பளம் வாங்கும் போது ராமராஜனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? தயாரிப்பாளர் சொன்ன தகவல்.

0
19725
ramarajan
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் ராமராஜன். இவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால் இவரை ‘வசூல் சக்ரவர்த்தி’ என்றே அழைத்து வந்தனர்.1986-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’. இது தான் ராமராஜன் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் வி.அழகப்பன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் ராமராஜன் ராஜன் வாங்கிய சம்பளம் குறித்து தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான தயாரிப்பாளர்களில் ஏ எல் அழகப்பனும் ஒருவர். இவர் 2004 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவர் சினிமா துறையில் மட்டுமில்லாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருகிறார். இவருடைய மகன் தான் ஏ.எல். விஜய் மற்றும் உதயா.

- Advertisement -

இதில் ஏ.எல். விஜய் என்பவர் இயக்குனராகவும் உதயா என்பவர் நடிகராகவும் உள்ளனர். இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களான ராமராஜன், ரஜினிகாந்த் சம்பளம் குறித்து கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Ramarajan was earning 1 lakh When Rajinikanth Salary was only 30000 rs for a movie – Producer AL Alagapan Interview

Ramarajan was earning 1 lakh When Rajinikanth Salary was only 30000 rs for a movie – Producer AL Alagapan Interview

Wetalkiess ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಮೇ 12, 2020

அதில் அவர் கூறியிருப்பது, ராமராஜன் அவர்கள் ஒரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வெறும் 30,000 தான் சம்பளம் வாங்கினார். ஆனால், இப்போது ராமராஜன் மற்றும் ரஜினியின் நிலைமை என்ன? இது தான் சினிமா. எதையுமே நம்மால் கணித்து சொல்ல முடியாது. யாருக்கு நேரம் நல்ல இருக்கோ அவர்களுடைய மார்க்கெட் சினிமாவில் உயர்ந்து அவர்களுடைய சம்பளமும் அதிகம் ஆகும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement