சின்னத்திரைக்கு முதல் முதலாக வந்த ராமராஜன் – தன்னை போலவே மிமிக்ரி செய்த அமுதவானனுக்கு ஸ்பாட்டிலேயே அவர் கொடுத்த பரிசு.

0
283
amudhavanan
- Advertisement -

பிரபல 90ஸ் நடிகரான ராமராஜனிடம் அவரை போல நடித்து காட்டி பாரிசு வாங்கியிருக்கிறார் அமுதவனான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சி சின்னத்திரையில் மிகவும் பிரபலமானது ஏனெற்றால் இந்த நிகழ்ச்சியில் இருந்துதான் சிவகார்த்திகேயன், அருந்த ராஜா அகமராஜ், ரோபோ சங்கர். புகழ், பாலா, வடிவேல் பாலாஜி போன்றவர்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக்கினார்கள். இந்நிலையில் சமிபத்தில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 4வது சீனன் சமீபத்தில் தொடங்கியது.

-விளம்பரம்-

கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் பலவிதமான கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளித்திரை மக்கள் நாயகன் ராமராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் இருந்து படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்தவர். இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.

- Advertisement -

இவர் 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ராமராஜன். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

ராமராஜன் கடைசியாக நடித்த படம்:

இதுவரை இவர் இதுவரை ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்திருந்தார். சினிமா பட வாய்ப்பு குறைவு என்பதால் இவர் குணச்சித்திர வேரங்களில் நடிக்க மறுத்துவிட்டார். 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு ராமராஜன் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் பயணித்தார். ராமராஜன் தன்னுடைய அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் 2012 ஆம் ஆண்டு மேடை என்ற படத்தில் ராமராஜன் நடித்திருந்தார். கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ராமராஜன் நடிக்கும் படம்:

இந்த நிலையில் மீண்டும் ராமராஜன் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர் சாமானியன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் ஐந்து மொழிகளில் தயாராகி இருந்தது. அதோடு சமீபத்தில் தான் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும் சாமான்யன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இடப்பதற்க்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ராமராஜன் கலந்து கொண்டு வருகிறார்.

KPY சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ராமராஜன் :

இந்த நிலையில் தான் நடிகர் ராமராஜன் விஜய் டிவியின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4க்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த ப்ரோமோ யூடியூபில் வெளியான நிலையில் அதில் ராமராஜனை போல பிக் பாஸ் பிரபலம் அமுதவாணன் நடனமாடி காட்டுகிறார்.

அமுதவாணனுக்கு மோதிரம் :

அதற்கு பிறகு நீங்கள் எத்தனை முறை இப்படி நடனமாடியிருப்பீர்கள் என்று அமுதவானான கேட்க ராமராஜன் 1 முறை தான் என சொல்ல ஆதவாணன் தான் பல முறை இப்படி நடனமாடி பரிசுகளை பெற்றதாக கூறினார். இதனையடுத்து அமுதவாணனுக்கு பரிசாக தான் போட்டிருந்த தங்க மோதிரத்தை பரிசாக அழைத்தார் ராமராஜன். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வெறியாகி வருகிரது

Advertisement