எங்க ஊரு பாட்டுக்காரன் பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க.! அவருடைய ஆசை இது தானம்.!

0
2552
- Advertisement -

கலர் சொக்கா’ நடிகர் ராமாராஜனின் படம் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ 1987ல் வெளிவந்த இந்த படத்தில் தான் ராமராஜன் ‘ செண்பகமே செண்பகமே, தென் பொதிகை சந்தனமே’ என பாடியே பசு மாட்டில் பால் கறந்துவிடுவார். இந்த படத்தில் ராமராஜனின் ஜோடியாக நடித்தவர் சாந்தி ப்ரியா என்ற நிஷாந்தி.

-விளம்பரம்-

இவர் தமிழில் நடித்த முதல் படமும் இதுவே. படத்தில் அந்த பாடலை பாடி பால் கறந்ததுடன் , நடிகை நிஷாந்தியின் மனதையும் கவர்ந்துவிடுவார். இந்த பாடல் மூலம் அப்போது பிரபலமானவர் நிஷாந்தி. இவர் வேறு யாரும் இல்லை, தமிழ் நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான்.

- Advertisement -

தமிழில் சில படங்களில் நடித்த நிஷாந்தி பின்னர் பாலிவுட் பட தயாரிப்பாளர் சித்தார்த்தை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 2004ல் சித்தார்த்து இறந்து விட தற்போது இரு மகன்களுடன் தனது கணவரின் ராஜ் கமல் ஸ்டுடியோசை நிர்வகித்து வருகிறார்.

மேலும், தனக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழிப் படத்திலும் நல்ல கதாப்பாத்திரம் அமைந்தால் நடிக்க தயார் எனக் கூறியுள்ளார்.

-விளம்பரம்-


Advertisement