ராமராஜன் நளினி தம்பதியனரின் மகனை பார்த்துளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

0
11097
ramarajan
- Advertisement -

90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.

-விளம்பரம்-
Image result for ramarajan son

நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

- Advertisement -

இன்றளவும் ராமாஜனின் பாடல்கள் கிராமத்து வாசிகள் மத்தியில் கேட்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ராமராஜன் இடையில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதன்பின்னர் ஆ தி மு க அணியில் இணைந்து தீவிர அரசியல்வாதியாகவும் அவதாரமெடுத்தார்.

Image result for ramarajan son

ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி.

-விளம்பரம்-

நடிகர் ராமராஜன் – நளினியின் மகன் ஆர் அருண். ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து கொண்டாலும், மகனின் திருமணத்தை சேர்ந்தே நடத்தினர். அருணுக்கும் பவித்திராவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.

Image result for ramarajan son

இந்த திருமண விழாவில் தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்தனர். பழைய நடிகைகள் விசித்ரா, வினோதினி, நடிகர் செந்தில் உள்பட பலரும் வந்திருந்தனர். மேலும், மகனின் திருமணம் முடிந்த கையேடு அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்து ஆசியும் பெற்றனர்.

Advertisement