இப்படி ஒரு முக்கியமான நாளை குழந்தைகளின் உதவியோடு கொண்டாடியுள்ள ரம்பா. உருக்கமான வீடியோ.

0
4108
rambha

தமிழ் திரையுலகில் 1993-ஆம் ஆண்டு வெளியான படம் ‘உழவன்’. இந்த படத்தில் ஹீரோவாக ‘இளைய திலகம்’ பிரபு நடித்திருந்தார். இதனை இயக்குநர் கதிர் இயக்கியிருந்தார். இதில் பிரபுவிற்கு ஜோடியாக பானு பிரியா நடித்திருந்தார். மேலும், கெஸ்ட் ரோலில் நடிகை ரம்பா நடித்திருந்தார். நடிகை ரம்பா அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் இது தானாம். இதனைத் தொடர்ந்து ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரம்பா. கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துக்கு பிறகு ‘செங்கோட்டை, சுந்தர புருஷன், அருணாச்சலம், வி.ஐ.பி, ஜானகி ராமன், நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, சுயம்வரம், மின்சார கண்ணா, உனக்காக எல்லாம் உனக்காக, ஆனந்தம், த்ரீ ரோஸஸ், பந்தா பரம சிவம்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடிகை ரம்பா நடித்தார். கடைசியாக ரம்பா நடித்த தமிழ் படம் ‘பெண் சிங்கம்’. இதில் ஹீரோவாக உதய் கிரண் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : இந்த நடிகர் என் சித்தப்பா தான். போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ரம்யா பாண்டியன். அட முக ஜாடை கூட ஒண்ணா இருக்கே.

- Advertisement -

அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி இந்திர குமார் பத்மநாதன் என்பவரை நடிகை ரம்பா திருமணம் செய்து கொண்டார். இந்திர குமார் பத்மநாதன் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ரம்பாவும், அவரது கணவரும் தங்களது 10-ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

View this post on Instagram

Birthday bash??

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) on

இது குறித்து ரம்பா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரோனாவால் 144 போடப்பட்டுள்ளது. ஆகையால், இந்த முறை எங்களது திருமண நாளிற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களை நாங்கள் அழைக்கவில்லை. நான், எனது கணவர்.. எங்களது குழந்தைகள் (லான்யா, சாஷா, ஷிவின்) மட்டும் வீட்டில் திருமண நாளை கொண்டாடினோம். இது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஃபங்க்ஷன். காரணம்.. ஃபங்க்ஷனிற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாங்களே செய்து கொண்டோம். கேக் கூட வெளியே ஆர்டர் செய்யவில்லை, நானும் எனது கணவரும் இணைந்து கேக் செய்தோம். கேக்கில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் எங்களுடைய இந்த 10 ஆண்டின் லவ் ஸ்டோரி உள்ளது.

இதையும் பாருங்க : அதன் பின்னர் தான் ஜிவாலாவை சந்தித்தேன். நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்.

-விளம்பரம்-

மேலும், எங்களது குழந்தைகள் சேர்ந்து செய்து கொடுத்த வாழ்த்து அட்டை எனக்கு மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது” என்று ரம்பா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களையும் ரம்பா வெளியிட்டிருக்கிறார். ரம்பா தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், போஜ்புரி, பெங்காலி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement