சினிமாவை விட்டு விலகியதற்கு காரணம் குறித்து நடிகை ரம்பா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி சினேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல் தொடையழகி என்ற வித்தியாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரம்பா நடித்திருந்தார். ஹீரோயினாக களம் இறங்கிய முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் ரம்பா. அதனைத் தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களில் நடித்து இருந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்திருந்தார். இதனிடையே நடிகை ரம்பா கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரம்பா திருமணம்:
அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் ரம்பா சினிமாவில் இருந்து விலகி விட்டார். தன்னுடைய குடும்பம், குழந்தைகள், கணவர் பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார். மேலும், இவர்களுக்கு சொந்தமாக மேஜிக் குழந்தைகள் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் திறந்து வைத்தார்கள். இதை அடுத்து 30-க்கும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு இருப்பதாக பேட்டியில் ரம்பா கூறி இருந்தார்.

ரம்பா குறித்த தகவல்:
அதோடு இதற்கிடையில் இவர் சில நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதற்கு பின் இவர் எந்த நிகழ்ச்சி, சினிமாவிலுமே தலைகாட்டாமல் தான் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் ரம்பா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் ஜோடி ஆர் யூ ரெடி. இந்த நிகழ்ச்சியை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்கி இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக ரம்பா களமிறங்கி இருக்கிறார். இதன் மூலம் இவர் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

சினிமா விட்டு விலக காரணம்:
இந்த நிலையில் சினிமாவிலிருந்து விலகியது தொடர்பாக பேட்டியில் ரம்பா, எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்து விட்டார்கள். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை ஒரு பெற்றோராவது அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால்தான் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தேன். குழந்தைகளை கவனிப்பதிலேயே எனக்கு நாட்கள் சென்றது. ஆனால், நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. என்னுடைய முதல் காதல் எப்போதுமே சினிமா தான் என்று கூறியிருக்கிறார்.
ரம்பா கம்பேக்:
அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு அளித்த பேட்டியில் ரம்பா, திரைப்படங்கள்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. ஏதாவது முக்கியமான, நல்ல விஷயங்கள் நடந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று கூறியிருந்தார். இருந்தாலுமே ரம்பா மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு கொண்டு வந்தார்கள். ரம்பா மீண்டும் வெள்ளி துறையில் கம்பேக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது..






