நடிகையை காதலிக்காதான்னு நான் சொன்ன.! அஜித்திற்கு அட்வைஸ் செய்த இயக்குனர்.!

0
1049

தமிழ் சினிமா பிரபலங்களில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சீனியர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.

Related image

நடிகை ஷாலினி, அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரியும். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. இந்த நிலையில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்த போது நடந்த ஒரு சம்பவத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Related image

ரமேஷ் கண்ணா முதன்முதலில் இயக்குநராக அறிமுகம் ஆனது அஜித் நடித்த ‘தொடரும்’ படத்தின் மூலம்தான். அதன் பின்னர் அஜித்துடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அப்படி அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது’ நடிகையை திருமணம் செய்யாதே. எல்லாரும் டைவர்ஸ் ஆகி போயிடுறாங்க. ஒரு நல்ல குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள் ‘ என்று அஜித்திற்கு அட்வைஸ் செய்துள்ளார்.

-விளம்பரம்-

ஆனால், அதன் பின்னர் தான் இயக்குனர் சரண் ரமேஷ் கண்ணாவிடம், அஜித்-ஷாலினி காதலிப்பதை தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அவருக்கு மிகவும் தர்மசங்கடமாக ஆகியுள்ளது. இருப்பினும் அஜித் மற்றும் ஷாலினியின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார் ரமேஷ் கண்ணா.

Advertisement