என் வீட்டு விஷேசத்துக்கு விஜய் வந்ததால், என்னை போலீஸ் விசாரித்தது – ரமேஷ் கண்ணா பகிர்ந்த சுவாரஸ்ய நினைவுகள்.

0
167
ramesh
- Advertisement -

என் வீட்டு பங்ஷனுக்கு விஜய் வருவாருன்னு நான் எதிர்பார்க்கவில்லை என்று ரமேஷ்கண்ணா அளித்து இருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரமேஷ் கண்ணா. இவர் நகைச்சுவை நடிகர் மட்டும் இல்லாமல் துணை இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தின் மூலம் தான் நகைச்சுவை நடிகனாக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும்.

-விளம்பரம்-

ஆனால், இவர் இயக்குனர், வசனகர்த்தா போன்ற பல்வேறு திறமைகளை கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இந்நிலையில் சமீபத்தில் ரமேஷ்கண்ணா பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் அவர் விஜய் குறித்து கூறியிருப்பது, ஒரு பத்திரிக்கையில் எவர்கிரீன் ஃப்ரண்ட் ஆஃப் அஜித் என்று என்னைக் குறிப்பிட்டு இருந்தார்கள். நான் அஜித் உடன் அமர்க்களம், அட்டகாசம், ஆஞ்சநேயா, வில்லன், வரலாறு என்று வரிசையாக பல படங்களில் நடித்து இருக்கிறேன். அதனால் ரசிகர்கள் நான் அஜித்துக்கு நெருக்கமானவன், விஜய்க்கு தூரமானவன் என்று நினைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ரமேஷ் கண்ணா அளித்த பேட்டி:

ஆனால், ரெண்டு பேருமே என்னை நண்பனாக தான் பார்க்கிறார்கள். விஜயுடன் நான் நடித்த ஒரே படம் பிரண்ட்ஸ். இருந்தாலும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்து இருந்தது. அந்த படத்தில் எனக்கு முக்கிய ரோலை இயக்குனர் சித்திக் கொடுத்திருந்தார். அதன் பிறகு ஓரிரு படங்களில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், தேதி மற்றும் வேறு சூழ்நிலைகளால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அஜித் என் மனதில் உயர்ந்து நிற்பவர் என்றால் விஜய் மரியாதைக்குரியவர். கொஞ்ச நாளாக விஜயுடன் பெரிய தொடர்பு எதுவும் இல்லாமல் இருந்தது. பின் என் மகனால் மீண்டும் விஜய் உடன் தொடர்பு உண்டானது.

விஜய் குறித்து ரமேஷ் கண்ணா கூறியது:

என் மூத்த மகன் ஜஸ்வந்த் சர்க்கார் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்து இருந்தார். அப்போது அவனின் திருமணத்திற்காக விஜயை அழைத்த இருப்பதாக சொன்னான். உடனே, நான் இல்லப்பா, அவங்க எல்லாம் பெரிய மனிதர்கள், பிசியாக இருப்பார்கள், வர முடியாது, நாம தொந்தரவு பண்ணக் கூடாது என்று சொன்னேன். அதற்கு என் மகன், கண்டிப்பாக விஜய் சார் வருவேன் என்று சொல்லி இருப்பதாக கூறினார். பின் நான், என் மனைவி, ஜஸ்வந்த் மூன்று பேருமே விஜயை சந்திக்க போயிருந்தோம். அப்போ அவரு ரொம்ப அன்பா எங்களை வரவேற்று நிறைய பேசி இருந்தார்.

-விளம்பரம்-

பிரண்ட்ஸ் பட பாணியில் புகைப்படம்:

மேலும், பிரண்ட்ஸ் படத்தில் விஜய், சூர்யா, நான் மூவரும் கை கோர்த்து ஒரு போட்டோ எடுத்து இருப்போம். அதே மாதிரி விஜய், நான்,ஜஸ்வந்த் மூணு பேரும் போட்டோ எடுத்து இருந்தோம். இதுவரை அந்த படத்தை நான் எங்கேயும் ஷேர் பண்ண வில்லை. முதன்முதலாக ஷேர் பண்ணுகிறேன். அதோடு என் மனைவியின் தந்தை பி.எஸ்.திவாகர் அந்த காலத்தில் பிரபலமான இசையமைப்பாளர். அவரிடம் விஜய் கிட்டார் கற்றுக்கொண்டதை கூறி உங்களுக்கு ஞாபகம் இருக்கா அக்கா? என்று அன்புடன் விஜய் கேட்டு இருந்தார். எனக்கு அந்த சந்திப்பே போதும் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். சொன்ன மாதிரியே விஜய் என் மகனின் திருமணத்திற்கு வந்திருந்தார்.

என் மகனின் திருமணத்தில் விஜய்:

விஜய் எங்கள் வீட்டு பங்ஷனுக்கு வர போகிறார் என்று சொன்னவுடனேயே கூட்டம் அலைமோதியது. நாங்கள் விஜய் வருவாருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் வந்த செய்தி பரவி ரசிகர்கள் மண்டபம் முன்னாடி வந்து விட்டார்கள். கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை. பின் விஜய் மேடைக்கு வந்து பத்து நிமிடங்கள் எங்களுடன் இருந்து ஜாலியாக பேசி சிரித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றார். விஜயை திரும்ப வெளியில் காருக்கு கூட்டிட்டு போயி அனுப்பி வைப்பது எங்களுக்கு பெரிய வேலையாகி விட்டது. இந்த ஆச்சரியமும் சந்தோசமும் குறைவதற்கு முன்னே திடீரென்று போலீஸ் வந்து விட்டார்கள். என்னை பார்த்ததும், சார் இது உங்கவீட்டு பங்க்ஷனா?

போலீஸ் கிட்ட மன்னிப்பு கேட்க காரணம்:

இதை முன்னாடியே சொல்ல மாட்டீங்களா? என்று கேட்டார். உடனே, என்ன சார் புதுசா இருக்கு?கல்யாணத்தை எதுக்கு போலீஸில் சொல்லணும் என்று கேட்டேன். வெளியே வந்து பாருங்கன்னு கூட்டிட்டுப் போனார். போய் பார்த்தா பயங்கர ட்ராபிக். விஜய் வந்தது தெரிந்து அவர் இன்னும் இங்க தான் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு எக்கச்சக்க கூட்டம். பின் நான் போலீஸ் கிட்ட மன்னிப்பு கேட்டேன். அங்க மட்டும் இல்லை சோசியல் மீடியாவிலேயும் அன்று என் பையன் திருமணம் பயங்கரமாக ட்ரெண்டிங்காக இருந்தது. விஜய் என் மகன் திருமணத்தில் கலந்து கொண்டிருந்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது. குறைவாக பேசினாலும் நிறைவான அன்பு வைத்திருப்பவர் விஜய் என்று கூறியிருக்கிறார்.

Advertisement