பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நான் பங்குபெறவில்லை.! வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர்.!

0
449

கடந்த இரண்டு தினங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது.

இரண்டு சீசனை போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இதற்கான ப்ரோமோ ஷூட்டிங்கிலும் அவர் கலந்து கொண்டார். மேலும், இந்த சீசனில் பங்குபெறும் போட்டியாளர்கள் யார் என்ற விவரமும் இணையத்தில் வெளியாகி வருகிறது.

- Advertisement -

அதில் பிரபல காமெடி நடிகர் ரமேஷ் திலக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் அதனை மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரமேஷ் திலக்.

Advertisement