‘திரெளபதி ஜனாதிபதி என்றால்’ இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை ட்வீட்.

0
249
ramgopalvarma
- Advertisement -

ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான திரெளபதி முர்மு குறித்து தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் குடியசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. பல கட்ட ஆலோசனை பிறகு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பாஜகவிலிருந்து விலகி திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகினார். இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கட்சி அறிவித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து பலரும் திரெளபதி முர்முக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது.

- Advertisement -

திரெளபதி முர்மு குறித்த ராம்கோபால் வர்மா டீவ்ட்:

இந்த நிலையில் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சையான டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர், திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? குறிப்பாக கவுரவர்கள் யார்? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராம்கோபால் வர்மா குறித்து நாராயண ரெட்டி கூறியது:

அந்த வகையில் தெலுங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான நாராயண ரெட்டி தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து பேட்டியில் நாராயணரெட்டி கூறியது, எஸ்இ மற்றும் எஸ்டி இன மக்களை ராம் கோபால் வர்மா அவமதித்துவிட்டார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இது போன்ற ட்வீட் அல்லது அறிக்கையை இனிமேல் அவர் வெளியிடமாட்டார் என நம்புகிறோம்.

-விளம்பரம்-

ராம்கோபால் வர்மாவை வறுத்து எடுக்கும் பிரபலங்கள்:

இதனை அடுத்து தெலங்கானாவை சேர்ந்த மற்றொரு பாஜக எம்.எல்.ஏ.வும், ராம்கோபால் வர்மா குடிபோதையில் இதை பதிவிட்டு இருப்பார். இது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது அவர் நடவடிக்கை என்று கூறி இருந்தார். இப்படி பலரும் ராம்கோபால் வர்மாவின் பதிவிற்கு வறுத்து எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து ராம்கோபால் வர்மா மற்ற ஒரு டீவ்ட் போட்டு இருக்கிறார்.

ராம்கோபால் வர்மா டீவ்ட்:

அதில் அவர், மகாபாரதத்தில் திரெளபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்தப் பெயர் மிகவும் அபூர்வமானது என்பதால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement