ட்விட்டரில் ஸ்ரீதேவி பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட ராம்கோபால் வர்மா.

0
3804
varma

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது 14 வயதில் இருந்து திரை வாழக்கையில் ஜொலித்து வரும் அவர் தனது 54வது வயதில் 40வது வருட திரை வாழ்கையில் எதிர்பாராத விதமாக முடித்துக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி, கன்னடம் என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்து ஈடு இணையற்ற புகழை அடைந்தவருக்கு இப்படி ஒரு மரணம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவருக்கு அஞ்சலி செலுத்திய தருணத்தில் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தினை இயக்க போவதாக செய்திகள் வந்தது. அந்த செய்திக்கு தற்போது ராம் கோபால் வர்மா பதில் அளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாவது.

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தினை நான் இயக்குவதாக வெப்த செய்திகள் தவறானது. அவருடைய வாழக்கை வரலாற்று படத்தை யாராலும் இயக்க முடியாது. ஏனெனில் அவருக்கு ஈடு இணையாக நடிக்க தற்போதைய நடிகைகளாள் ஒருபோதும் முடியாது. அவ்வளவு திறமையானவர் அவர்.என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ராம் கோபால் வர்மா.