பெரிய இடத்து பெண், ஒத்துக்கொள்ளாத ராதிகா, லேண்ட் லைனில் தொடர்ந்து காதல் – ராம்கி,நிரோஷாவின் சூப்பரான லவ் ஸ்டோரி

0
533
- Advertisement -

முதல் முறையாக மனம் திறந்து தன்னுடைய காதல் கதை குறித்து நடிகை நிரோஷா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நிரோஷா. இவர் எம் ஆர் ராதா அவர்களின் மகளாவார். இவருடன் பிறந்தவர்கள் அனைவருமே தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் தான். குறிப்பாக, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதாவின் தங்கை தான் நடிகை நிரோஷா என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், நிரோஷா அவர்கள் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடம் பிடித்தார். பின்னர் இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு ராம்கியும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் நடிகை நிரோஷா சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த உடன் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கிறார்.

- Advertisement -

நிரோஷா திரைப்பயணம்:

இன்னும் சில தினங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைய இருக்கிறது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாகும். அதற்கான ப்ரோமோக்களும் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் ஸ்டாலினின் மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் நிரோஷா தன்னுடைய காதல் கல்யாணம் குறித்து கூறியிருந்தது, நான் சென்னை, இலங்கை, லண்டன் மூன்று இடங்களில் தான் படித்தேன். சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூர பூவே படப்பிடிப்பில் தான் எனக்கும் ராம்கி சாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நிரோஷா -ராம்கி காதல்:

ஆரம்பத்தில் எங்களுக்குள் நிறைய சண்டை வரும். அவர் என்னை தண்ணீரில் இருந்து தூக்கும் காட்சியில் அவரை திட்டி விட்டேன். கமல் சார் கூட என்கிட்ட சொல்லிட்டு தான் மேலே கை வைப்பார். நீங்க உங்க இஷ்டத்துக்கு கை வைக்கிறீங்க என்று பயங்கரமாக திட்டி விட்டேன். பின் படபிடிப்பில் எதிர்பாராத விதமாக ரெண்டு ரயில்களுக்கிடையில் நான் சிக்கும் காட்சி. கொஞ்சம் விட்டிருந்தால் நசிங்கிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னை காப்பாத்தினார். அதற்குப் பிறகு மருத்துவமனைக்கு போகும்போதும் என் கைமீது அவர் கையை வைத்து நான் இருக்கேன், ஒன்னும் ஆகாது தைரியமா இரு என்று சொன்னார்.

-விளம்பரம்-

காதல் வளர்ந்த கதை:

அப்போதுதான் என்னுடைய மனதை நான் அவரிடம் பறிகொடுத்தேன். அதற்கு பிறகு எங்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த சண்டைகள் எல்லாம் போய்விட்டது. பின் ஒருத்தரை ஒருத்தர் தேட ஆரம்பித்தோம். காதலர்கள் ஆனோம். ஆனால், எங்களுடைய காதலுக்கு என்னுடைய வீட்டில் நிறைய எதிர்ப்பு கொடுத்தார்கள். ராதிகா கூட எங்கள் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. சினிமா நபரை கல்யாணம் செய்யக்கூடாது என்பதில் எங்களுடைய வீட்டில் உறுதியாக இருந்தார்கள். அவருடன் நான் பழகுவதை தடுக்க என்னுடைய அம்மா, என்னுடைய அண்ணன் எப்போதும் பக்கத்திலேயே இருப்பாங்க.

திருமணம் குறித்து சொன்னது:

எங்கள் வீட்டில் எல்லோரும் இரவு தூங்கின பிறகு லேண்ட்லைன் போன்ல தான் அவரிடம் ரகசியமாக பேசுவேன். இப்படித்தான் எங்களுடைய காதல் வளர்ந்தது. என்னை கட்டாயப்படுத்தி என்னுடைய பிறந்த ஊரான இலங்கைக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள். ஆறு மாதங்கள் அங்கே இருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாமல் பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு எப்படியோ தப்பிச்சு சென்னைக்கு வந்துவிட்டேன். பிறகு என்னுடைய வீட்டை சமாதானப்படுத்தி எங்கள் திருமணத்துக்கு ஒப்பு கொண்டார்கள் என்று கூறி இருந்தார்.

Advertisement