நடிகை ரம்யா கிருஷ்ணன் சினிமா வந்ததற்கான காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 44ஐ கடந்தாலும் இளமை மாறாமல் இருக்கும் நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ரம்யாகிருஷ்ணன். இவர் தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார்.

இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு புகழ் பெற்ற நடிகை. தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் ‘வெள்ளை மனசு’.
அதன் பின்னர் ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் இவர் 'ஆட்டமா தேரோட்டமா' என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழி படஙகளில் நடித்து வந்தார்.
ரம்யா கிருஷ்ணன் குறித்த தகவல்:
மேலும், இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது படையப்பா படத்தில் தான். அதன் பின் பாகுபலி படத்தில் சிவகாமி என்ற ரோலில் நடித்து தனக்கென ஒரு சிம்மாசனத்தை தென்னிந்திய சினிமாவில் பிடித்து இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தற்போது இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களில் மிரட்டி கொண்டு வருகிறார்.
https://www.youtube.com/watch?v=QBoQAPfsrPE
ரம்யா கிருஷ்ணன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் குறித்து கூறிய விஷயம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் ரம்யா கிருஷ்ணன், தெலுங்கில் முதல் படமே தோல்வி அடைந்தது. அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு எனக்கு எந்த வெற்றி படமும் கிடைக்கவில்லை. இதனால் நான் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்போது எனக்கு படிப்பு, தேர்வு எல்லாம் கண்டால் ரொம்ப பயமாக இருந்தது.
https://www.youtube.com/shorts/1pF2Ut8YPxg
சினிமாவில் நடிக்க காரணம்:
அதற்கு பயந்து கொண்டுதான் நான் சினிமாவுக்கே வந்தேன். ஆனால், சினிமாவிலுமே தொடர்ந்து தோல்விகள் இருந்தது. இதனால் என்னுடைய பெற்றோர்கள் மீண்டும் என்னை படிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், நான் படிக்கவே மாட்டேன் என்று அவர்களிடம் வாக்குவாதம் எல்லாம் செய்தேன். பின் 'சூத்திரதாருலு' படத்திற்குப் பிறகு 'அல்லுடுகரு' படத்தின் மூலம் தான் ஒரு வெற்றி கிடைத்தது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களுடன் நடித்தேன். அதற்கு பிறகு ஸ்டார் நடிகையானேன். அந்த நிலைமைக்கு வர நான் ஏழு ஆண்டுகள் கஷ்டப்பட்டேன் என்று கூறியிருக்கிறார்.






